politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

10.6.11

பெருசு....


எவ்வளவு பெருசு என்று கேட்டால், கையை அகல விரித்து பெருசு என்று அடி வயிற்றில் இருந்து சொன்னாலும் ஏனோ மனம் நிம்மதி அடைய மாட்டேன் என்கிறது. ஏன் என்றால் இது கற்பனையையும் மிஞ்சி விடும் பெருசு...
2g ஊழல் தான் பெருசு என்று கூறியவர்கள், இதை பற்றி மூச்சு விட மாட்டேன் என்கிறார்கள்...
நம் நாட்டில் இது வரை வசூலிக்கப் படாமல் நிலுவையில் உள்ள வரி தொகை 2,50,000,00,00,000 ரூபாய்[2.5 லட்சம் கோடி] . இதை கட்டாதவர்கள் யார் என்றால் நம் நாட்டு அரசியல் வாதிகள் அல்ல, பெரும் தொழிலதிபர்கள்...
சம்பளம் வாங்குபவர்கள் வரியை அவர்களே பிடித்து கொள்வதால், நம் நாடு தள்ளாடியாவது நடந்து கொண்டிருக்கிறது...
இந்த தொகையை வசூலிக்க ஏற்கனவே நியமிக்கப் பட்ட குழு என்ன ஆனது என்பதற்கு, புதிதாக நியமிக்கப் பட்ட குழு தான் பதில் என்று பதில் வருகிறது.
ஆக இவர்கள் செய்யும் ஊழல் பெரும் அளவில் கண்ணிற்கு தெரியாமல் ஒளிந்து கொள்கிறது.
பாஸ்போர்ட் மோசடியில் சிக்கி உள்ள ஹசன் அலி கட்ட வேண்டிய வரி தொகை அவரின் சொத்து மதிப்பையும் தாண்டி செல்கிறது என்பது இன்னும் ஒரு தலை சுற்றும் விஷயம்...
அரசியல்வாதிகளுக்கு எதிராய் சாட்டையை சுழற்றும் நீதி மன்றங்கள், இந்த விஷயத்தில் கண்ணை கருப்பு துணி போட்டு மூடி கொள்கிறது...
அரசியல் வாதிகளின் ஊழலின் ஆணிவேர் எங்கு உள்ளது கைப்புன்னாய் தெரியும் பொழுது கண்ணாடியை தேடிக் கொண்டிருப்பானேன்...

http://articles.timesofindia.indiatimes.com/2011-06-09/india/29637753_1_tax-defaulters-tax-arrears-direct-taxes