Pages
politics, critics of medias, and update of hot news
இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...
8.4.11
முட்டாள்கள் தினம்...
முட்டாள்கள் தினம் ஏப்ரல் ஒன்றாம் தேதி என்று யார் கூறியது, ஏப்ரல் இரண்டாம் தேதி என்று காங்கிரஸ் சொல்கிறது...
இந்திய நாட்டு மக்களின் கவனம் முழுவதும் உலக கோப்பையின் மேல் இருக்க, மிகவும் அமைதியாக ஒரு ஊழல் நடந்தேறியிருப்பது ஊடகங்களின் கண்களுக்கு நான்கு நாட்கள் கழித்து ஆறாம் தேதி தான் திரிந்திருக்கிறது...
கோவா மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர், கணக்கு வழக்கு இல்லாமல் 25 இலட்சம் ரூபாய்க்கு மேல் வெளிநாட்டுக்கு எடுத்து சென்றுள்ளதும், அவரை தடுத்து நிறுத்திய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு, மேலிடத்தில் இருந்து அழைப்பு வந்ததும் எந்த கேள்வியும் இல்லாமல் வழி அனுப்பி வைக்க பட்டதும்.. தெரிய வந்துள்ளது...
என்னடா உலக கோப்பையின் வெற்றிக்கு பின்னால் எந்த ஆப்பும் மறைத்து வைக்க படவில்லையே என்ற என் சந்தேகம் ஆணித்தரம் ஆகிறது...
எத்தனை அண்ணா ஹசாரே உண்ணா விரதம் இருந்தாலும் நம் நாட்டை ஆளும் வர்கத்தினர் திருந்த போவதில்லை...
வாழ்க ஜனநாயகம்..
http://www.thehindu.com/news/national/article1609641.ece
Labels:
அரசியல் கட்சிகள்