politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

13.4.11

எப்புடி...

சார்,
உங்களுக்கு இட்லி வேணுமா?
இல்லை உங்களுக்கு இட்லி வேணுமா?
இந்த மாதிரி ஏதாவது ஒரு ஓட்டலில் சர்வர் கேட்டிருந்தால்... லூசாடா நீ என்று கேட்டிருப்போம்,
ஆனால் இன்று தேர்தல் என்ற பெயரில்,
ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்கள்...
நீங்க திருடனுக்கு வோட்டு போட போறீங்களா..
இல்லை நீங்க திருடனுக்கு வோட்டு போட போறீங்களா?
போடுவோமில்ல
என்று எதோ ஒரு திருடனை தேர்ந்தெடுக்க 75.2 % மக்கள் புறப்பட்டிருக்கிறார்கள்,
லூசாடா நீ என்று கேள்வி கேட்க விரும்பாதவர்கள், வீட்டிலேயே டிவி பார்த்து கொட்டாவி விட்டு தூங்கியிருக்கிரார்கள்...
நான் ஒருவரிடம் சொன்னேன்,
சார்
மறக்காம 49 ஓவுக்கு வோட்டு போடுங்கனேன்,
அதுக்கு அவர் சொன்னார்,
பூத் அஜெண்டுக்கு யார் சார் பதில் சொல்றது அப்படின்னார்...

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...

http://ibnlive.in.com/news/tn-polls-752-pc-voters-peacefully-cast-votes/149141-37-64.html