politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

30.4.11

நம்ம பணம் சாமியோ....


1.75 லட்சம் கோடி ஊழலை பார்த்து விட்ட பிறகு 16000 கோடி ரூபாய் ஊழல் எல்லாம் நம் கண்ணுக்கு பெரிசாவே தெரிய மாட்டேங்குது...
இந்த விமான ஓட்டிகள் எல்லோரும் வேலை நிறுத்தம் செய்வதையும், அதனால் அவதிப் படும் பொது மக்களின் கஷ்டங்களையும் கண் முன்னே கொண்டு வரும் ஊடகங்கள் அவர்கள் என் போராட்டம் செய்கிறார்கள் என்பதை கண்ணுக்கு மறைவாக தெரியப் படுத்துகிறார்கள்...
பொதுவாக வேலை நிறுத்தம் என்பதே சம்பள உயர்வுக்காக மட்டும் தான் என்ற பொதுவான கருத்து நிலவி வருவதால், அதை பற்றி யாரும் ஆராய்ச்சியும் செய்வதில்லை...
விமான ஓட்டிகளின் வேலை நிறுத்தம் என்பது, ஏர் இந்திய நிறுவனத்தின் பொருளாதார முறைகேடுகளை குற்றப் புலனாய்வு துறை விசாரிக்க வேண்டும் என்னும் கோரிக்கை அடங்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்...
தொழிலாளர்கள் தினம் என்பது தொலைக்காட்சியில் புது படம் பார்ப்பதற்காக என்று இல்லாமல் இந்த விமான ஓட்டிகளின் போராட்டம் வெற்றி பெறுவதற்காக இருக்கட்டும்....
இந்த போராட்டத்திற்கு உடனே முடிவு காணாமல், நமது அரசாங்கம் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதும் தெளிவாகிறது...
ஒரு ரூபாயோ ஒரு கோடி ரூபாயோ அது நம்ம பணங்க..
இன்குலாப் ஜிந்தாபாத்...

http://www.thehindu.com/news/national/article1980580.ece