
இன்று இந்தியாவின் மூலை முடுக்கு எல்லாம் ஒலிக்கும் ஒரே வார்த்தை ஊழல்... அனைவரும் ஊழலை ஒழிப்போம் என்று கிளம்பி விட்டார்கள்..
இவர்கள் அனைவரும் ஊழல் என்ற ஒன்றால் பாதிக்க பட்டிருக்கிறார்கள், அவ்வளவே...
இத்தனை காலமாய் ஊழல் நம் நாட்டில் மலிந்து உள்ளதே, அதன் ஆணிவேர் எங்கு இருக்கிறது என்று தேடாமல்,
ஊழலை வேரோடு பிடுங்காமல்,
வெறும் மண்ணுக்கு மேல் தெரியும் மரத்தை மட்டும் கண்டு பயந்து போயிருக்கிறார்கள்...
ஆலமரம் பிரம்மாண்டமானதாக வெளியில் தெரிந்தாலும், அதை விட பிரம்மாண்டமாக அதன் வேர் எங்கெங்கு பரவி இருக்கிறது, என்பது நுனிப்புல் மேய்வதால் தெரியப் போவதில்லை...
ஊழலின் வேர் எங்கே என்று அனைத்து குடிமகனும் ஆராய்ந்தால் ஒழிய இந்த ஆலமரத்தை சாய்க்க முடியாது...
சாய்த்த மறு கணமே, அதன் வெட்டிய பாகத்தில் துளிர் விட ஆரம்பித்திருக்கும்...
ஆக ஊழலின் ஆணிவேர் எங்கு உள்ளது என்று நான் கூறுவதை விட, நீங்களே ஆராய்ச்சி செய்து பாருங்கள்...
தோழர் ஆதி கூறியது இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது,
சங்கராச்சாரியாரை நடு இரவில் எழுப்பி கடவுள் இல்லை என்று சொன்னால்...
உனக்கு இப்ப தான் தெரியுமா? எனக்கு எப்பவோ தெரியும்.. என்று கூறி விட்டு தூங்கி விடுவாராம்...
ஆக தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை..
நீங்களே முடிவு செய்யுங்கள் என்ன செய்யலாம் என்று...
மே மாதம் ஆறாம் தேதி வந்த செய்தி நான் மேலே குறிப்பிட்டுள்ள ஆணிவேரின் ஒரு நுனியை வெளிக் கொண்டு வந்துள்ளது...
சஹாரா நிறுவனம் 2g விசாரணையில் தலையிடுகிறது...
http://profit.ndtv.com/news/show/sahara-group-tried-to-interfere-with-2g-inquiry-153111?pfrom=home-பிசினஸ்
27/06/2011
அண்ணாவின் அந்தர் பல்டி ஊழலை எதிர்த்து ஒன்று பட்டு போராட கிளம்பிய மக்களை, தங்களுக்குள்ளே மாநில ரீதியாக அடித்துக் கொள்ள வைத்து விட்டது..
பேசறதுக்கு முன்னாடி யோசிங்க, சாமியோ...