
முயலாமை கதை பிறந்து வெகு காலம் ஆகியும், அதில் இருந்து பல புதிய கேள்விகள் பிறந்து கொண்டு தான் இருக்கின்றது...
ஒரு வேளை முயல் தூங்காமல் ஓடி இருந்து, வெற்றி கோட்டை தொட்டிருந்தால் அது வென்றதாக இருந்திருக்குமா? அல்லது மனம் தளராமல் வெற்றி கோட்டை நோக்கி சோர்வடையாமல் வந்த ஆமை வென்றதாக ஆகி இருக்குமா?
என் நண்பன் செந்தில் நாதன் விடியன்காடு என்னும் ஊரில் உள்ள பள்ளி கூடத்தில் படித்தவன்.. மூன்றே மூன்று ஆசிரியர்கள் தான் அந்த பள்ளிக்கு அவன் படிக்கும் காலத்தில்.. அவன் வாங்கிய மதிப்பெண் 997 பன்னிரெண்டாம் வகுப்பில்...
கணிதம் 188
இயற்பியல் 196
வேதியல் 197
ஆக எல்லா வசதிகளும் கிடைத்து, அதிகமாய் மதிப்பெண் வாங்கியதாலே அவர்கள் வென்றதாக ஆகி விடுமா?
தேவை இல்லாத இந்த தேர்வு முறை, ஒரு ஓட்ட பந்தய போட்டியாக தான் நம் வாழ்க்கையை மாற்றி விடுகிறது...
வாழ்ந்து பார்க்க விடுவதில்லை...
ஓட்டத்தை நிறுத்தி சுற்றும் முற்றும் பார்த்து உலகத்தை ரசிப்போம்,
நடந்து பார்ப்போம்..
வாழ்ந்து பார்ப்போம்..