politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

30.5.11

௧...௨...௩....


௧,௨,௩ [1,2,3] ஒப்பந்தம் தொடர்பான விவாதங்கள் சூடாக அரங்கேறிய பொழுது, எத்தனையோ விதமான கருத்துக்கள் வெளி வந்தது... அவற்றில் பல வளர்ந்த நாடுகள், வளர்கின்ற நாடு, வல்லரசாக கனவு காண்போம், பொருளாதார ரீதியான வளர்ச்சி, என்று பலவிதமான கருத்துக்களை அந்த ஒப்பந்தத்தை ஆதரித்து வெளியிடப் பட்டது...
ஜப்பான் என்ற ஒரு நாடு பூகம்பத்தால் ஆட்டிவைக்கப் பட்டவுடன், இதே நாக்கு முன்னுக்கு பின் முரணாக பேசுவது வேடிக்கையாக இருக்கிறது...
ஜெர்மனியின் சுற்றுச் சூழல் அமைச்சர் அனைத்து அணு உலைகளையும் நிறுத்துவது என்று பேசி வருகிறார்..
நம் நாட்டு போபால் விபத்துடன் இணைத்தும் பேசி வருகிறார்கள், வைச்சா குடுமி அடிச்சா மொட்டை... நடுவில வேற எதையும் யோசிக்க மாட்டாங்களோ...
சாமி, நம்ம நாட்டுல இருக்கிற ப்ளுடோனியும் பயன் படுத்த எப்படி அணு உலை கட்டுவது என்று ஆராய்ச்சி செய்யுங்கள், மாறாக இன்னும் இத்துப் போன உறநியத்தை கட்டி என் மாரடிக்கிறீர்கள்...
நமது மூளை பிரமாதமானது,
பதவியில் இருக்கும், யாராவது இதை பற்றி யோசிப்பீர்களா?

http://www.ctv.ca/CTVNews/Canada/20110530/coalition-agrees-nuclear-free-germany-by-2022-110530/