ஆனால் நீ ஏழையாக இறப்பது உன் குற்றமே...
இப்படி ஒரு புது மொழி உண்டு
மால்குடி சித்தனின் சிந்தனை என்ன என்றால்..
இந்த புது மொழி ஆட்சியாளர்களின் தவறான கொள்கையால், அவதிப் படும் சோமாலிய மக்களுக்கும் பொருந்துமா?
சோமாலியா பஞ்சத்தால் வாடும் தேசம் என்று பெரும்பாலும் நினைத்துக் கொண்டு இருந்தாலும்.. இன்றைய சோமாலிய மக்களின் ஏழ்மை நிலைக்கு பஞ்சம் ஒரு காரணம் என்றாலும், மிக முக்கியமானது இது வரை ஆண்ட ஆட்சியாளர்களின் ஊழலும், தவறான கொள்கைகளும் தான்..
உதவி என்ற பெயரில் வளர்ந்த நாடுகள் செய்தவை அனைத்தும் உதவி புரிந்த நாடுகள் வளரவே உதவி புரிந்தன. ஆக மேலும் மேலும் சுரண்டப் பட்ட மக்கள் இன்று வாழ்வாதாரம் இல்லாமல் நொடிந்து போய் உள்ளனர்...
ஒரு வேளை ஏழையாக இருக்க விருப்பம் இல்லாமல் தாய் நாட்டை விட்டு பிற நாட்டுக்கு சென்றிருக்க வேண்டும் என்று சொல்கிறார்களோ?
மேலும் படிக்க
http://www.cato.org/pubs/pas/pa-205.html
மேற்கண்ட கட்டுரையை படிக்கும் பொழுது இந்தியா மனதில் வந்து சென்றதை மறுக்கவில்லை...