politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

27.10.11

தமிழக வாக்காள பெருமக்களே

உள்ளாட்சி தேர்தல் குறித்து நான் பதிவு எழுதிய பொழுது, சிலர் கூறிய கருத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கூறிய கருத்தும் தவறு என்பது இன்று வெளி வரும் பலப் பரீட்சை செய்திகளில் வெளிவருகிறது...

உள்ளாட்சி தேர்தல் என்பது அங்கங்கே நிற்கும் வேட்பாளர்களை பொறுத்தது என்றும், இதில் கட்சிகளுக்கு முக்கியத்துவம் இல்லை என்றும் தேர்தலுக்கு முன் கூறிய அனைத்து கட்சிகளின் தலைவர்களும், இன்று பலப் பரிட்சையில் ஈடு பட்டுள்ளது, உண்மையை அப்பட்டமாக விளக்குகிறது...

என் வாக்கு வங்கி சரியவில்லை என்றும், எங்கள் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது என்றும் ஒவ்வொருவரும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று தெள்ள தெளிவாக கூறி வருகின்றனர்... கட்சிகளுக்கு முக்கியத்துவம் இல்லை என்று கூறியவர்கள், ஏன் கட்சியின் பலத்தை பற்றி அலச வேண்டும்...

இதை விட கொடுமை என்ன என்றால் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த கட்சியின் தலைவர், அன்புள்ள தந்தை, என்ன கூறியிருக்கிறார் என்பது தான்...

நாங்கள் ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது ஜெயித்தது போல தான் இன்று ஆளும் கட்சியில் இருப்பவர்கள் ஜெயித்துள்ளார்கள் என்று எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை என்று கூறியுள்ளார்...

ஆக ஆளும் கட்சியில் இருப்பவர்கள் தான் ஜெயிப்பார்கள் என்று தெரிந்த பிறகு ஏன் மக்களை வைத்து காமடி பண்ணி கொண்டு திரிய வேண்டும்...

ஓட்டுக்கு பணமும், வாக்காளர்களுக்கு பரிசு பொருள்களும் தீபாவளி நெருங்கிய சமயத்தில் பலருக்கு கை கொடுத்தது என்றாலும், தோற்றவன் வீடு வீடாக சென்று அருவெறுப்பான வார்த்தைகளில் திட்டுவதும், கள்ள பணம் கொடுத்த வெற்றி பெற்றவன் ஓடி ஒளிவதும் இது தாண்டா தேர்தல் என்று தெள்ள தெளிவாக காட்டுகிறது...

மக்கள் விழிப்புணர்வு பெரும் கால பெருவெளியில் நாம் நிற்கிறோம், இனிமேலும் அரசியல் என்பது சாக்கடை என்று ஒதுங்கி செல்லாமல், கற்றுணர்ந்தவர்கள் இறங்கி சுத்தம் செய்ய தொடங்க வேண்டிய நேரமிது...

காலம் கனியும், காத்திருப்போம்... 
காலம் கனிந்த பின், வழிநடத்துவோம்...