politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

8.11.11

முடியுமா? முடியாதா?

"முடியும் என்று நினைப்பவனால் தான் வரலாறு படைக்க முடியும்..."

இது யாருக்கு சொல்லப் பட்ட அறிவுரை என்று தெரியாது...

திரு. அப்துல் கலாம் அவர்களே...

எங்களால் அணு உலை வராமல் தடுக்க முடியும் என்று நினைத்தால் வரலாறு படைக்க முடியும் அல்லவா...

போராடும் மக்களுக்கு சொல்லும் பதிலை...
முடியாது, தெரியாது என்று சொல்லும் ஆட்சியாளர்களிடம் சொல்லுங்களேன்...

விலைவாசியை உடனடியாக கட்டுப் படுத்த முடியாது... கட்டுப் படுத்த எந்த மந்திர கோலும் இல்லை.
-பிரணாப் முகெர்ஜி.

பெட்ரோல் விலை ஏற்றாமல் இருக்க முடியாது... ஏனெனில் பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்கின்றன.
-முரளி தியோரா.

ஏழ்மை கோடு என்பது ரூபாய் 26 மற்றும் 32 என்று முடிவெடுத்ததை திருப்பி பெற முடியாது.
- மோன்டேக்

டக்லஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது. ஏனெனில் இரு நாட்டு உறவுகள் பாதிக்கும்.
- இந்திய அரசு.

இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தை தகவல் உரிமை சட்டத்தில் சேர்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
- பரூக் அப்துல்லா, சரத் பவார்.


இப்படி அடுக்கி கொண்டே போகலாம்...
முடியும் என்று நினைத்து முயற்சி செய்தாலும் சரி,
இந்த வழியில் முடியாது என்று நினைத்து வேறு வழியில் முயற்சி செய்தாலும் சரி.
வரலாறு படைக்க முடியும்...

அணு உலை மட்டுமே மின்சார தேவையை பூர்த்தி செய்யும், பிற மின்சாரங்கள் பூர்த்தி செய்யாது என்று அதை பற்றி ஆராய கூட முடியாது என்றால் வரலாற்றில் உங்கள் பெயர் கண்டிப்பாக இருக்கும், எதிர்மறை எண்ணத்துடன்.

பாலைவனத்தில் சூரிய ஒளி மூலமாகவும், கடலில் நிறுவும்  காற்றாலை மூலமாகவும், கடலலை மூலமாகவும் கண்டிப்பாய் மின்சார தன்னிறைவை அடைய முடியும் என்று நினைக்கிறோம் அணு மின்சாரம் வேண்டாம் என்று போராடும் நாங்கள்..

முடியாது என்கிறீர்களா நீங்கள்?

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2608482.ece