politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

4.11.11

சூரியன் ஜீவன்

தியாகு என்ற வலைப் பதிவர்

அணு உலை எதிர்ப்பாளர்களிடம் கேட்கும் கேள்வி இது..
அவர் கேட்டு விட்டார், கேட்காதவர்களும் இருப்பார்கள்..

ஒரு வகையில் இந்த கேள்விகள் இன்னும் உண்மைகளை வெளிக் கொணர்வதால் அவரை பாராட்ட எனக்கு வார்த்தை இல்லை.

இனி கேள்விகள்...

1.இந்தியாவின் மொத்த கரண்டு தேவை எவ்வளவு ?
2.சூரிய ஒளியின் மூலம் பெறப்படும் மின்சாரம் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு எவ்வளவு ?
3.எத்தனை சதுர கிலோ மீட்டர்கள் வெற்றிடம் உள்ளது ?
4.இருக்கிற இடத்தில் மேக்சிம எவ்வளவு பெற முடியும் ?
5.அடுத்து அதற்காகும் செலவு எவ்வளவு ?

1.மேஜர் தெர்மல் பவர் அதுக்கு நிலக்கரி வேண்டும் அதன் கையிருப்பு குறைந்து விட்டால் என்ன செய்வீர்கள் என கேட்டு இருந்தேன் பதில் இல்லை ?

2.முற்றிலும் சூரிய ஒளி அல்லது காற்றாலையை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் நாடு எது அப்படி இல்லைன்னா ஏன் இல்லை ?

3.சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க தேவைப்படும் மொத்த இடம் எவ்வளவு அதாவது நமது மொத்த மின்சார தேவையின் அடிப்படையில் அதற்கான செலவு எவ்வளவு ?

இந்த கேள்விகளுக்கான பதில்கள்.

அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது படி பார்த்தால் 1,03,000 mega watt மின்சாரம் தேவை படும்.
இதில் 11.5% பற்றாக்குறையுடன் 90,000 mega watt மின்சாரம் தயாரிக்கப் படுவதாக எழுதி இருந்தார்.

ஆனால் உண்மையில் இந்தியாவுக்கு 9,50,000 mega watt மின்சாரம் 2030 ஆம் ஆண்டுக்குள் தேவை ஏற்படும் என்று கணிக்கப் பட்டுள்ளது...

இந்தியா பெறும் சூரிய ஒளியில் இருந்து ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 200 mega watt மின்சாரம் எடுக்க முடியும்.

ராஜஸ்தானிலும் குஜராத்திலும் உள்ள பாலைவனங்களின் பரப்பளவு 2,08,110 சதுர கிலோ மீட்டர்கள்.

அதில் வெறும் 15,000 சதுர கிலோ மீட்டர்களை மட்டும் உபயோகப் படுத்தினாலே 3,00,000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க முடியும் என்ற நிதர்சன உண்மை உள்ளது.

http://en.wikipedia.org/wiki/Electricity_sector_in_India

இப்பொழுது இந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்து விட்டதால், இவர்கள் அடுத்த கேட்கப் போகும் கேள்வி, மூலதனம்..
ஒரு அணு உலை அமைக்க மட்டுமே 2500 கோடி செலவு செய்யும் அரசு, இதற்க்கு மூலதனம் இட முடியாதா...

ஏற்கனவே நான் பல பதிவுகளில் சொல்லியது போல் ஒரு கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கவும், சோலார் பானேல்களை பராமரிக்கவும் சேர்த்து மூன்று ரூபாய் மட்டுமே செலவாகும். இது தனியார் நிறுவனங்கள் விற்கும் பொருட்களை வைத்து கணக்கிட்டு உள்ளேன். இன்னும் அரசு முனைப்பு எடுத்து அவர்களை இந்த பானேல்களை தயாரித்தால் செலவு குறைய பெரும் வாய்ப்பு உள்ளது.

1 kilo watt = 1 unit = 3.00 rupees

இதற்கு ஆதாரம் என் முந்தய பதிவில் உள்ளது...
http://suryajeeva.blogspot.com/2011/10/blog-post_04.html

கடைசியாக அவருடைய ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லவில்லை.
ஏன் எந்த நாடும் முற்றிலும் சூரிய ஒளி  மூலமாகவும், காற்றாலை மூலமாகவும் மின்சாரம் தயாரிக்கவில்லை என்று கேட்டிருந்தார்...
அதற்கான பதில் அவர் பதிவின் தலைப்பு தான்..

விஞ்ஞானத்தை எதிர்ப்பதன் மூலம் என்ன சொல்ல விரும்புகிறோம் –பிற்போக்கு தனத்தையா?

ஆக்கப் பூர்வ அறிவியலை எதிர்ப்பதை விட்டு விட்டு, அழிவு அறிவியலை எதிர்ப்பதை கொள்கையாக்குவோம்..

வாழ்வோம், நம் சந்ததிகளை வாழ விடுவோம்...

பின் குறிப்பு: கல்பாக்கம் அணு உலை குறித்தும் கேள்விகள் எழ ஆரம்பித்து விட்டது, மகிழ்ச்சியாக இருக்கிறது. பூவுலக நண்பர்களின் ஒரு கட்டுரையின் சுட்டியை நமக்கு அளித்து உள்ளார் தோழர். ராஜா MVS