politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

6.11.11

யார் பொறுப்பு?

பத்து நாட்கள் கழித்து பேசுவேன் என்று கூறிவிட்டு, 
இன்று கூடங்குளத்தை ஆய்வு  செய்வதாக கூறி விட்டு,
ஆய்வுக்கு புறப்படும் முன்பே அணு சக்தி தான் சிறந்தது என்று கட்டுரை வரைவது, எந்த விதத்தில் எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை...

பிறக்கப் போகும் சந்ததியினரை கதிர்வீச்சு என்பது எந்த விதத்திலும் பாதிக்காது என்று உத்தரவாதம் அளித்துள்ளார். கதிர்வீச்சு பிறக்கும் குழந்தைகளை பாதிக்கும் என்று கூறுவது கற்பனாவாதமானது என்று கூறியுள்ளார். அதற்கு அவர் காட்டும் உதாரணம், நாகாசாகியும் ஹிரோஷிமாவும்...

செர்நோபில் விபத்துக்கு பிறகு சுமார் 83,000 குழந்தைகள் குறைகளுடன் பிறந்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது ஒரு ஆய்வு.

அணுசக்தி தான் சிறந்தது என்று கூறும் நம் முன்னாள் ஜனாதிபதி அவரது கனவு திட்டமான புறா [ PURA ] வில், சூரிய ஒளி சக்தி மூலமே ஒரு கிராமம் முழுவதும் மின்சார தேவையில் தன்னிறைவு அடைய முடியும் என்று திட்டம் வகுத்துள்ளார்.

அவரை பற்றி பலருக்கு மரியாதை இருப்பதால் இதற்கு மேல் வேறு எதுவும் பேசாமல் ஒன்றே ஒன்றை மட்டும் கூறிக் கொண்டு விடைபெறுகிறேன்...

நாளை இந்த திட்டம் நிறைவேறி கல்பாக்கம் மக்கள் போல், கூடங்குளம் மக்கள் பாதிக்கப் பட்டால், அதற்கு முழு பொறுப்பாளியாக இந்த திட்டத்தை ஆதரித்த அனைவருக்கும் சாரும் என்பதை மட்டும் கூறிக் கொள்கிறேன்...