politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

3.11.11

விழிக்கும் வரை கொட்டு முரசே...

வளர்ந்த உலக நாடுகள் பெரும்பான்மை, அணு உலைகள் குறித்து மறு பரிசீலனை செய்ய ஆரம்பித்து விட்டதாக ஐரோப்பிய ஆற்றல் மற்றும் பாதுகாப்பு மைய இயக்குனர் சென்னையில் நேற்று நடை பெற்ற கருத்தரங்கில் பேசி உள்ளார்... 

பெரும்பாலான நாடுகள் புகுஷிமாவுக்கு பிறகு தங்கள் அணு மின்சாரம் குறித்த பார்வையை சுய பரிசோதனை செய்ய ஆரம்பித்த விட்டதாக கூறுகிறார் இவர்.

ஜப்பான் தன நாட்டில் இனி மேல் அணு உலைகளை அமைக்கவே அமைக்காது என்று கூறி விட்டு, ஆனால் பிற நாடுகளில் அணு உலைகளை அமைக்க உதவும் என்று கூறுவது, எந்த விதத்தில் சேர்ப்பது என்று தெரியவில்லை...

கூடங்குளம் மக்கள், அனைத்து அணு உலைகளையும் எதிர்த்து போராட வேண்டும் என்று கூறுகிறார் ஒரு பதிவர்... கண்டிப்பாக போராடுவார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை எனக்கு... 

ஏதேதோ சாயம் பூசி, மக்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்த முடியாததால்.. ஏன் அவர்கள் கல்பாக்கம் எதிர்த்து போராட வில்லை என்ற கேள்வி கேட்டு அந்த மக்களின் உணர்வை கொச்சை படுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள்...

ஜைதாபூர் மக்கள், கேரளா மக்கள், மேற்கு வங்க மக்கள், ஜப்பான் மக்கள் என்று எங்கெங்கோ இருந்து கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவு கரம் நீள்வதை நீர்த்து போக வைப்பதில் உள்ளது பலர் நோக்கம்...

அது நடக்காது...
மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டவர்கள் அறிவார்கள், ஒரு வேளை இந்த மக்களின் உணர்வுகளை மதிக்காமல் மின்சாரம் தயாரித்தாலும் இனி இந்நாட்டில் வேறு எங்கும் அணு உலைகள் அமையாது என்பது மட்டும் உறுதி...

மாற்று வழி என்ன என்று கூறாமல் போராடுவது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு, நாங்கள் எவ்வளவு கூறினாலும் நீங்கள் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பீர்கள்..[சூரிய சக்தி, கடலில் காற்றாலை] மாறுதலுக்கு மாற்று வழி என்ன என்று நீங்கள் ஆராய்ந்து பாருங்கள், இந்த மக்கள் போராட்டத்தின் உண்மை புரியும்..