politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

9.10.11

மீண்டும்...

கூடங்குளம் மீண்டும் விவாத பொருளாகி இருக்கிறது...
இன்று உண்ணாவிரத அறிவிப்புடன் தொடங்கி இருக்கிறது சில நாட்கள் விடுப்பு எடுத்த போராட்டம்...

கூடங்குளம் அணு மின் நிலையம் திறக்க பல்வேறு முயற்சிகள் திரை மறைவில் எடுத்த வண்ணம் உள்ளனர், அவற்றில் ஒன்று ஊடகம் மூலம் இந்த அணு மின் நிலையம் அமைந்தால் மின்வெட்டே இருக்காது என்று தம்பட்டம் அடிப்பது... மேலும் சூரிய ஒளி மின்சாரம் ஒரு அலகு 20 ரூபாய் வரும் என்று திரும்ப திரும்ப பழைய பஞ்சாங்கம் பாடுவதே... இன்றைய சூழ்நிலையில் சூரிய ஒளி மின்சாரம் ஒரு அலகு 3 ரூபாய்க்கு மேல் வராது என்று முந்தய சுடாத சூரியன் என்ற பதிவில் குறிப்பிட்டுள்ளதை நினைவு கோருகிறேன்... http://suryajeeva.blogspot.com/2011/10/blog-post_04.html

மேலும் இவர்கள் கூறுவது கல்பாக்கம் இயக்கத்தில் ஏதாவது தவறு நிகழ்ந்துள்ளதா என்று கேட்பதே, முறையான ஆதாரம் இல்லாமல் கசியும் செய்திகளை வெளியிடுவது ஊடகங்களுக்கு தற்கொலைக்கு சமம் என்பதால் வதந்திகள் வதந்திகளாகவே உள்ளன... ஆனால் நெருப்பில்லாமல் புகையாது என்று தெஹெல்கா ஊடகம் கல்பாக்கம் குறித்து செய்திகள் வெளியிட்டுள்ளது 

மேலும் கூறும் பொழுது புகுஷிமா அளவுக்கு நிலநடுக்கத்தை இந்தியா இதுவரை சந்தித்ததில்லை என்று கூறுகிறார்கள்...

உண்மையில் சமீப காலமாய் இந்தியாவில் நிலநடுக்கம் அதிகமாகி இருக்கிறது என்கிறது புள்ளி விவரங்கள்...
புகுஷிமா - 6.6 ரிக்க்ட்டர் அளவுகோல் 
சிக்கிம் - 6.9 ரிக்டர் அளவுகோல் 

தமிழகத்திலும் நிலைமை மாறி வருகிறது என்று எச்சரிக்கிறது 
http://earthquake-report.com/2011/08/11/earthquakes-list-august-12-2011/

அரசுக்கு நாம் கேட்பது ஒரே ஒரு கேள்வி தான் எங்கள் சார்பாய் முடிவெடுக்க தான் உங்களை நாங்கள் ஆட்சி செய்ய அனுப்பி இருக்கிறோம்... வருங்காலத்தில் பிறக்கப் போகும் பிள்ளைகள் வாழ்வை முடிவெடுக்க அதிகாரம் நமக்கு இல்லை, நாளை பிறக்க போகும் சந்ததியினர் ஏன் இந்த முட்டாள் தனமான காரியத்தில் ஈடுபட்டு அணு உலை அமைத்து எங்கள் வாழ்வில் உலை வைத்தீர்கள் என்று கேட்டால் அதற்க்கு பதில் உங்களிடம் இருக்கிறதா? நிச்சயமாக எங்களிடம் இல்லை....