politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

18.9.11

சேலமும் கூடன்குளமும்

யார் பேச்சையும் கேட்காத, கேட்க விரும்பாத அரசு என்பதை கூடங்குளம் போராட்டமும், சேலம் போராட்டமும் வரலாற்றில் பதிவு செய்து சென்றுள்ளது...

தன் தோழர்கள் மறியல் செய்ததற்காக காவலர்களிடம் அடி வாங்கி மண்டை உடைந்து காவல் நிலையத்தில் உட்கார்ந்திருக்கும் பொழுது ஆட்சியாளர்களை கண்டிக்க விரும்பாத பொதுவுடைமை கட்சிகள், நான்கு சீட்டுக்கு நாக்கை தொங்க போட்டு கொண்டு காத்திருந்தது, மக்களிடம் இருந்த கொஞ்ச நஞ்ச நல்ல பெயரையும் கெடுத்து சென்றது...

உத்தமர்கள், பொய் சொல்ல மாட்டார்கள், ஊழல் செய்ய விரும்ப மாட்டார்கள் என்று எத்தனை பெயர் வேண்டுமானாலும் வாங்குங்கள், ஆனால் தேர்தல் களத்தில் நம்பியவர்களை கை விடும் கட்சி என்று பெயர் வாங்குவதால் மண்ணை தான் கவ்வுவீர்கள்... 

உங்கள் தொண்டர்களும், கொஞ்சம் மக்களும் நிஜமாகவே உங்கள் மேல் நல்ல நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், அது என்று அரசு ஊழியர்களை கூட்டம் கூட்டமாக வீட்டுக்கு அனுப்பிய ஆத்தாவை ஆதரித்த அன்றே சிதைந்து போனது... 
அடித்த காவலர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்வதாக தயவு செய்து சொல்லாதீர்கள்... ஆட்சியாளர்களின் ஆசீர்வாதம் இல்லாமல் காவலர்கள் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்..

அதே போல் தான் நடந்து கொண்டிருக்கிறார் கேப்டன் , கூடங்குளம் போராட்டத்தில் நீங்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் உண்ணாவிரதத்தில் உட்கார வையுங்கள், ஏன் நீங்களே கூட உட்காருங்கள், ஆனால் இதை சட்டமன்றத்தில் பேசுவது என்ற அரசியலை நான் செய்ய மாட்டேன் என்று ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் என்பதை ரசிக்க முடியல கேப்டன்..