உள்ளாட்சி தேர்தல்,
எப்ப அறிவிச்சாங்க, எப்படி அறிவிச்சாங்க என்று திரும்பி பார்ப்பதற்குள் எவ்வளவோ நடந்து விட்டது...
அனைத்து கட்சிகளும் தனித்து போட்டி என்ற நிலைமைக்கு தள்ளப் பட்டது தான் அருமை.. இதில் மதில் மேல் பூனையாக என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டிருப்பது இரு இந்திய முதலாளித்துவ கட்சிகள்.. [capitalist party of india ]
தலைமை சிந்திக்காது என்று தெரிந்து கொண்டு தன்மான சிங்கங்கள் தென் தமிழக பொது உடமை வாதிகள் தனித்து போட்டி என்று ஒரு மாவட்ட செயலாளர் பேட்டி கொடுக்கும் அளவுக்கு சென்றிருக்கிறார்கள்....
சரி; இந்த விஷயம் தீக்கதிர் பத்திரிக்கையில் வந்திருக்கிறதா என்று பார்த்தால், உள்ளாட்சி தேர்தல் குறித்து தனி ஆவர்த்தனமே நடத்தி இருக்கிறார்கள் செய்திகள் என்ற பிரிவில்... இன்று மாநில குழு கூடி விவாதிக்க போகிறார்களாம்... இது மார்க்சிஸ்ட் தகராறு...
ஆனால் பாண்டியன் குழுவினர் தான், எப்ப கட்சியை கலைத்து விட்டு அ.தி.மு.க வில் இணைந்து விடலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறார்கள் போல் தெரிகிறது... அப்படி ஒரு மௌனம் சாதிக்கிறார் தா.பா... அட போங்கப்பா...
இதில் இன்னும் கொடுமை என்ன என்றால் அனைத்து கட்சிகள் மீதும் பொது மக்கள் கடுப்பில் இருப்பது தான்...
அ.தி.மு.க செய்த தவறுகளை கண்டு கொள்ளாமல் இருந்ததால் அந்த அணியில் இருந்த பிற கட்சியினர் மீது கோபமும், தி.மு.க வின் கொள்ளைகள் வெளிச்சத்தில் சந்தி சிரிப்பதால் அந்த அணியில் இருந்த கட்சிகள் மீதும் ஆத்திரமும் கொண்டுள்ளனர் பொதுமக்கள்.. [கவனிக்க பொது மக்கள் ]
அனைத்து கட்சிகளும் தனித்தும் மற்றும் பல சுயேட்சைகள் களம் காணும் உள்ளாட்சி தேர்தலில் அத்தனை சின்னங்களுக்கு மத்தியில் ஒரே ஒரு 49 ஓ வை சேர்த்து வையுங்கப்பா என்று கூறினால் கடுப்பாக போகிறார்கள் தேர்தல் ஆணையாளர்கள்...
ஓட்டு போடும் நாளில் மறுபடியும் நோட்டு புத்தகமா என்று கடுப்பாக தான் போகிறேன் நான்....
இருந்தாலும் ...
மறக்காமல் அனைவரும் 49 ஓ வுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்..