ஏற்கனவே புது தகவல் தொழில் நுட்ப சட்டப் படி வலைகளில் திரியும் ஆட்சேபகரமான கருத்துக்களை நீக்க அரசுக்கு முழு அதிகாரம் ஏற்படுத்தி கொண்டு இப்பொழுது, அடுத்து ஒவ்வொருவர் கையிலும் இருக்கும் ஊடகமான குறுஞ் செய்தியின் மீது கண் வைத்துள்ளது அரசு..
தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் வெளியிடப் போகும் கட்டுபாட்டில் ஒருவர் நூறு குறுஞ் செய்திகளுக்கு மேல் அனுப்ப கூடாது என்று முடிவெடுக்கப் போகிறதாம்..
ஏன் இந்த கட்டுபாடாம்?
பொருட்களை விற்கும் நிறுவனங்கள் அதிக அளவில் குறுஞ் செய்தி அனுப்புவதில் இருந்து மக்களுக்கு விடுதலை தரவே இந்த திட்டமாம்..
பல்வேறு நிறுவனங்களின் கை வண்ணங்களால் ஏற்கனவே இந்த தேவை இல்லாத விளம்பர குறுஞ் செய்திகளை ஒழித்து கட்ட எடுத்து வந்த நடவடிக்கை எல்லாம் கிடப்பில் கிடக்கும் பொழுது, அவர்களை காரணம் காட்டி போராட்ட குரலை ஒடுக்கும் நடவடிக்கையாகவே ஆணிவேர் இதை பார்க்கிறது.. eg: DND 1909 service...
விளம்பரத்தை குறுஞ் செய்தியாக அனுப்ப நினைக்கும் நிறுவனம் நூறு அல்லது ஆயிரம் சிம் அட்டைகளை வைத்து கொண்டு ஒரு நாளைக்கு எத்தனை குறுஞ் செய்திகளாகவும் அனுப்ப முடியும் என்பதை தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் சிந்திக்காமலா இந்த திட்டத்தை கொண்டு வருவதாக கூறுகிறார்கள் என்ற சந்தேகமே, நம் முடிவுக்கு ஆணித்தரமாய் முத்திரை குத்துகிறது..
அண்ணா வின் உண்ணாவிரத போராட்டத்திற்கும் ஈழத்தில் நடந்த மனித உரிமை மீறல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதாக இருக்கட்டும் குறுஞ் செய்திகளின் பங்கு என்ன என்பது அலை பேசி வைத்திருக்கும் அனைவரும் அறிந்ததே...
போராட்ட குரலை ஒடுக்க நினைக்கும் எந்த அரசும் நிலைத்திருந்ததாக வரலாறு இல்லை...
நூறு குறுஞ் செய்திகள் என்ற வரை முறைக்குள் வரும் முன்னர் ஒரு முறையாவது கூடங்குளம் போராட்டம் குறித்து ஆதரவு தெரிவித்து குறுஞ் செய்தி அனுப்பலாமே