27 வருடங்கள் கழித்து முதல் முறையாக போபால் விஷ வாயுவால் தாக்கப் பட்ட மக்கள் முழு கடையடைப்பை நேற்று கோரியிருக்கிறார்கள்...
கோரிக்கை ரொம்ப சாதாரணமானது..
உண்மையாகவே அந்த விபத்தில் பாதிக்கப் பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கொஞ்சம் ஆணித்தரமாக அரசு சொல்ல வேண்டும் என்பதே, ஒரு நாள் 5000 என்பதும் மறுநாள் 15,000 என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று முழு கடையடைப்பை கோரியிருக்கிறார்கள்..
பாதிக்கப் பட்ட நம் நாட்டு மக்களை பற்றி கவலை படாமல் அந்த நிறுவனத்தின் முதலாளியை பத்திரமாக தாய் மண்ணுக்கு அனுப்பி வைக்க கவலைப்பட்டு கொண்டிருந்த அரசு, நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது..
பிரான்ஸ் நாட்டில் அணுக கழிவுகளை நிலத்தடி நீருக்குள் செலுத்தியதை கண்டுபிடித்து 40,000 யுரோக்களை அபராதமாக கட்ட சொல்லியிருக்கிறது அந்நாட்டு நீதிமன்றம்.. சாதாரணமாய் எழும்பும் கேள்வி என்ன என்றால் இதனால் பதிக்கப் பட்டவர்களுக்கு இந்த அபராதத்தால் எப்படி நீதி கிடைக்கும் என்பதே?http://www.thehindu.com/opinion/op-ed/article2526288.ece
இப்படி மக்கள் பற்றி சிந்திக்காத அரசுகள் தான் இன்று கூடங்குளத்திலும் வாழ்வுக்கு [அணு]உலை வைக்க திட்டமிட்டு வருகிறார்கள் என்பதால் சாதாரணமாகவே எதிர்ப்பு கிளம்பி உள்ளது... சாதி மதம் பாராமல் இணைந்திருக்கும் ஒற்றுமை கண்ணை உறுத்த ஊடகங்கள் மூலம் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள்கின்றனர்..
என்ன இருந்தாலும் காங்கிரஸ் வெள்ளைக்காரன், அமைத்து விட்டு சென்ற கட்சி தானே...
அரசு, பாதிக்கப் பட்டவர்களுக்கு நியாயம் செய்வதை விட, வரும் காலங்களில் பாதிக்கப் படாமல் பார்த்துக் கொள்வது தானே நியாயம்..
சும்மாவா சொன்னாங்க, வருமுன் காப்பது நலம் என்று...
பிற்சேர்க்கை: பின்னூட்டங்களில் ஒரு அனானி தவறான தகவல்களை தர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார்... இணையத்தில் வரும் தகவல்களை வைத்தே நான் இங்கு பதிவு அமைப்பேன்... அப்படி அவர் கேள்வி கேட்க விரும்பினால் tehelka இனைய இதழை கேள்வி கேட்கலாம்... சுமார் 20,000 மக்களை வெளியேற்ற கூறி விட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன், அது தவறு 30,000 மக்களை வெளியேற்ற கூறி விட்டார்கள் என்று tehelka இனைய தளம் வெளியிட்டுள்ளது... இங்கே உள்ள சுட்டியில் கடைசி பத்திக்கு முன் படிக்கவும்... http://www.tehelka.com/story_main46.asp?filename=Ne110910Accident_Sites.asp