politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

1.8.11

இடி மின்னலுடன் கேள்விகள்

சதுரங்க ஆட்டத்தில் சிப்பாயை இழப்பது, ஆட்டத்தில் ஒரு சலனத்தை ஏற்படுத்தும்... அப்படி பட்ட நிலையில், தன் கை ஓங்குவதற்காக தானாகவே சிப்பாயை இழக்கும் ஒருவன், எந்த நிலையிலும் ஓங்கிய கையை விட்டு கொடுக்க முன் வர மாட்டான்... நேற்று லண்டனில் நடந்த மட்டை பந்து ஆட்டம் பற்றியதல்ல இந்த கட்டுரை, மாறாக நம் அரசியல் சதுரங்கம் குறித்த பதிவு...

மழைக் கால கூட்டத் தொடர், இடி மின்னலுடன் ஆரம்பிக்க போகிறது என்பது ஏற்கனவே திட்டமிட்ட ஒன்று தான்... 
சரியான நேரத்தில் வெளி வந்த கர்நாடக அரசின் ஊழல் சில சிக்கல்களுக்கு வழி வகுத்தது... நாடாளுமன்றத்தை கிடுக்கி போட வேண்டும் என்ற பா.ஜ.க.வினரின் எண்ணத்தில் சிறு மண் அள்ளி போட்டது... சுதாரித்து எழுந்த பா.ஜ.க.வினர் எட்டியூரப்பாவை ராஜினாமா செய்ய வைத்ததே, நாடாளுமன்றத்தில் சூறாவளியை கிளப்பத் தான்... 

அவர்களிடம் பிரதமர் கெஞ்சி கேட்பதும், பிரணாப் சமரசம் செய்யக் கிளம்புவதும் இருட்டில் ஒளிந்து உள்ள பூனையை வெளிக் கொணர்கிறது..
நீங்கள் தவறே செய்யவில்லை என்று தானே கூறுகின்றீர்கள், பின் எதற்கு அச்சம்... நீங்கள் அச்சப் படுவதை பார்த்தால் எலும்பு கூடுகள் எதிர் கட்சிகளிடம் இருப்பது போல் தெரியவில்லை...

பகத் சிங் நாடாளுமன்றத்தில் குண்டு வீசியதே, பேச்சுரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக தான்.. அவரின் பேச்சை நீதிமன்றம் பதிவு செய்தது, பின்னால் நம் சுதந்திரத்திற்கும் வழி வகுத்தது...

அது போல் நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பங்களில் ஈடுபடாமல், தெளிவாய் பேசி ஆளும் கட்சிக்கு கிடுக்கி பிடி போட வேண்டும் என்பது தான் உங்களுக்கு ஓட்டு போட்ட  அனைவரின் எண்ணமும்...

இதை மனதில் வைத்து,
கீழ்கண்ட கேள்விகளை எடுத்து வைத்தாலே போதும், காங்கிரஸ் படுத்து விடும்...

எந்த ஊழலிலும்  தவறே நடக்கவில்லை என்று பிரதமர்  பொய் சொல்ல வேண்டிய அவசியமென்ன?

புருலியாவில் தீவிரவாதிகளுக்கு வான் வழியே ஆயுதம் குடுத்ததாக எழுந்த 
குற்றச்சாட்டுக்கு இது வரை நடை பெற்ற விசாரணை என்ன சொல்கிறது?

எரிபொருள் விலை ஏற்றம் குறித்தும் அதை குறைக்கவும் வழியே இல்லையா?
மாற்று வழி கூறினால் அதை நடைமுறை படுத்தப் படுமா?

கருப்பு பணம் குறித்து தகவல்கள் வரும் முன்பே, அனைத்து பணமும் வேறு இடம் பெயர்வதை தடுக்க அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?

தமிழகத்தில் சமச்சீர் கல்வி குறித்து மத்திய அரசின் நிலை பாடு என்ன? சமச்சீர் கல்வி தான் வர வேண்டும் என்றால், ஏன் வரக் கூடாது என்று சொல்லும் மெட்ரிக் பள்ளிகளுக்கு வக்காலத்து வாங்குகிறார் அபிஷேக் சிங்வி...?

மொத்தத்தில் இந்த மூன்று ஆண்டுகளில் மத்திய அரசு செயல் படுத்திய சாதனைகள் என்ன? 

இன்னும் எவ்வளவோ இருக்கிறது கேள்விகள்?
கேள்விகளுக்கு பஞ்சம் வைக்காமல் ஆட்சி நடத்தி இருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்..
அக் கேள்விகளை குழி தோண்டி புதைக்காமல், கூச்சல் குழப்பம் இல்லாமல் நாடாளுமன்றத்தில் பதிவு செய்யுங்கள்.. அது தான் உங்களை நம்பி வோட்டு போட்ட மக்களுக்கு நன்றி கடன் ஆகும்...

தவறு செய்வது மனிதனின் இயல்பு, அதை மறைத்து தவறை தப்பாக்குவது மன்னிக்க முடியாதது...