தொழிலாளர் நல சட்ட திட்டங்களை காலில் போட்டு மிதிப்பது தான் திராவிட கட்சிகளின் பண்பு என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது தமிழக அரசின் நடவடிக்கை..
ஏற்கனவே டாஸ்மாக் எனப்படும் அரசு மதுபான கடைகளில் தொழிலாளர் நலன்கள் கண்டு கொள்ளப் படுவதேயில்லை... அரசு மதுபான கடைகளை மூடுவதே சால சிறந்தது என்பதால் அங்கு தொழிலாளர் நலன் கேட்டு போராடுவது தகுந்த வழி அல்ல..
ஆனால் சமச்சீர் கல்வி குழப்பத்தால் மாணவர்கள் படிப்பு பாழாகி விடும் என்று அனைத்து அரசு பள்ளிகளுக்கும் 35 நிமிடங்கள் கூடுதலாக இயங்க வேண்டும் என்று கூறி ஆசிரியர்களின் வேலையில் அரை மணி நேரம் கூடுதலாக்கி இருக்கின்றனர்...
இதற்கு எவ்வித எதிர்ப்பு குரலும் கிளம்பாததால் எனக்கு எழும் சந்தேகங்களில் சில...
ஒரு வேளை ஆசிரியர்கள் மாணவர்கள் நலன் கருதி அமைதியாக இருக்கலாம்..
அல்லது
பிடிவாதம் பிடித்த அரசிடம் என்ன கேட்பது என்று அடங்கி செல்லலாம்..
அல்லது
எட்டு மணி நேரம் வேலை என்றாலே நாங்கள் ஒழுங்காக வேலை செய்ய மாட்டோம் இப்ப இன்னும் கூடுதலாக்கினால் மட்டும் வேலை செய்து விடுவோமா என்று எண்ணமாக இருக்கலாம்...
ஆணிவேரின் கணிப்பு என்ன என்றால்
உண்மையாக வேலை செய்பவர்கள் அனைவரும் தங்கள் நலன் கருதாமல் மாணவர்கள் நலன் கருதி அமைதியாக இருக்கிறார்கள்...
வேலை செய்யாமல் இருப்பவர்கள் எவ்வளவு நேரம் வேலை என்றாலும் வேலை செய்யாமல் தான் இருக்க போகிறார்கள்...