ஆந்திரா மாநிலத்தில் மக்களை பகடையாக்கி, மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட உத்தமர்களின் ஊழல் வெளிச்சத்தில் வருமா என்று எனக்கு நானே கேள்வி கேட்டுக் கொண்டேன்... அநேகமாய், தெலுங்கானா தீயில் கொழுந்து விட்டு எரிந்து விடும் என்று தோன்றுகிறது...
merck மற்றும் GSK போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் பயங்கர லாப பசிக்கு ஆந்த்ராவின் மலை வாழ் மக்கள் பலியாகிரார்களோ என்று என்ன தோன்றுகிறது... ஏற்கனவே இது குறித்து ஒரு சின்ன பதிவு போட்டிருந்தாலும், இன்று பிருந்தா காரத் அவர்கள் எழுப்பியுள்ள கேள்வி மீண்டும் அந்த பிரச்சினையில் என் மூக்கை நுழைக்க வைத்துள்ளது...
- பல்வேறு வகையான பக்க விளைவுகள் உள்ள இந்த தடுப்பூசி குறித்து எந்த வித உண்மைகளையும் தெரிவிக்காமல் படிக்காத பாமர மக்களின் மேல் பிரயோகித்து இன்று பல பேர் இறந்தும், இறந்த விஷயங்களை மூடி மறைத்தும், பல்வேறு வகையான இன்னல்களுக்கு ஆளாகி இருப்பதும் வெளிச்சத்திற்கு வர ஆரம்பிக்கிறது...
- மிகவும் விலை உயர்ந்த இந்த தடுப்பூசி மருந்தை தேசிய தடுப்பூசி அட்டவணையில் சேர்ப்பதால் மிகவும் பெரிய இந்திய சந்தையை தங்கள் கைகளுக்குள் கொண்டு வந்து எந்த வித செலவும் இல்லாமல் கொள்ளை லாபம் அடிக்கும் திட்டமே இது...
- இந்த தடுப்பூசி போடுவதால் மட்டும் இந்த தடுப்பூசி எதற்க்காக போட படுகிறதோ அந்த நோயை தடுக்க முடியும் என்று எந்த விதத்திலும் எங்கும் ஆணித்தரமான செய்திகள் காண கிடைக்கவில்லை...
- ஏற்கனவே சோதனை செய்யப் பட்டு கிடைத்த தகவல்களை கூட பரிசோதனை செய்து கொண்ட மக்களிடம் சம்பந்தப்பட்ட எவரும் சொல்லாததும், PATH என்கிற அரசு சாரா பன்னாட்டு நிறுவனம், இதனால் எந்த பக்க விளைவும் இல்லை என்று, பொய் சொல்வதும் நடக்கிறது..
மேலும் அரசுக்கு சில வழிகாட்டுதல்களையும் அதன் அறிக்கையில் கூறியிருப்பது எவ்வளவு கோடி ஊழல் இந்த தடுப்பூசி விஷயத்தில் நடந்தேறியிருக்கும் என்று கற்பனையில் என்னை மிதக்க விட்டுள்ளது