கூடங்குளம் அணு மின் உலையில் மின்சார தயாரிப்பின் ஒத்திகை செய்ய ஆரம்பித்து விட்டதாகவும், இனிமேல் கூடங்குளம் அணு மின் நிலையத்தை இயக்காமல் இருப்பது ஆபத்தானது என்றும் கூறியுள்ளார்.
ஒத்திகை செய்ததற்கே பராமரிப்பு வேண்டும் என்று நீங்கள் சொல்வதும், முழு வீச்சில் மின்சாரம் தயாரித்தால் முப்பது ஆண்டுகள் கழித்து வீணாகவே அந்த அணு உலை பராமரிக்க வேண்டுமே என்று பொதுமக்கள் கூறுவதும் ஒன்று தானே...
கூடங்குளம் போராட்ட குழுவினர், திரு.பானர்ஜி அவர்களுக்கு கண்டனங்களை தெரிவித்து உள்ளனர்...
என் கேள்வி என்ன என்றால், mock evacuations என்னும் ஒத்திகை வெளியேற்றம் எதுவும் செய்யாமல் இவர்கள் எப்படி மின்சாரம் தயாரிக்கும் ஒத்திகை மட்டும் நடத்தினார்கள் என்பதே...
பத்தோடு பதினொன்றாய் எத்தனையோ கேள்விகள், அனைத்துக்கும் கேள்வியே பதிலாக...