politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

21.10.11

ஜனநாயகம் கேள்விக்குறியாய்...

மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு மக்களை வஞ்சிக்குமா? மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்குமா? இது கூடங்குளம் அணு மின் நிலைய ஆதரவாளர்கள் வைக்கும் முக்கிய கேள்வி.

வரலாறை உற்று நோக்குபவர்கள் இருளில் வாங்கிய சுதந்திரத்தை விடிய விடாமலே, இன்னும் மக்களை இருளிலேயே வைத்திருக்கிறது மக்கள் தேர்ந்தெடுத்த அரசு என்று அடித்து சொல்லுவார்கள்...

ஆனால் சுற்றுப் புறச் சூழல் குறித்து கேள்வி இது என்று கேட்பார்களேயானால், அவர்களுக்கு சிறந்த பதிலாக அமைந்துள்ளது, ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சுற்றுப்புறச் சூழல் சீர்கேடுகளும் - அந்த நிறுவனத்தை ஆதரிக்கும் மக்கள் தேர்ந்தெடுத்த அரசும் ஆகும்...

மகாராஷ்ட்ராவில் துரத்தி அடிக்கப் பட்டு, குஜராத்தில் மறுக்க்கப் பட்டு, கோவாவில் கால் பதிக்க முடியாமல் தமிழகத்தில் கால் பதித்திருக்கிறது ஸ்டெர்லைட் என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர் புதிய தென்றல்

நிலத்தடி நீரும், காற்றும் மாசுப்பட்டு சுற்றுபுறத்தில் வாழும் கிராம மக்கள் மிகுந்த நோய் வாய்ப்படுகிறார்கள் என்று கவலைப்படுகிறார்  படித்ததும், பாதித்ததும் வலைபதிவர்

இன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடும் மக்களை விட அதிகமாக கூடங்குளம் ஆலைக்கு எதிராக மக்கள் அணி திரண்டு உள்ளது, மக்களின் எழுச்சியை அறிவித்தாலும்... அதை நிராகரிக்கும் போக்கை மத்திய மாநில அரசுகள் கடைபிடிப்பதை நன்றாக உணர முடிகிறது...

இன்றைய தேவை மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்றே அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தும் பொழுது, மக்களின் தேவை கூடங்குளம் அணு உலை முற்றிலும் கை விடுவதே ஆகும்...

இரு துருவங்களாய் இருக்கும் மக்களும் ஆட்சியாளர்களும் ஒரே புள்ளியில் சந்திக்க, ஆட்சியாளர்கள் தாங்கள் மக்கள் பிரதிநிதி என்பதை உணர்வதில் உள்ளது...