politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

19.7.11

மூளை சலவை..

ஹிந்து பிசினஸ் லைன் என்னும் நாளிதழில் இந்த வாரம் திரு.கோகுல் கிருஷ்ணமூர்த்தி என்பவர் கட்டுரை வரைந்துள்ளார்...

பொருள்களை விளம்பரப் படுத்த கட்டுபாடுகளை தளர்த்தி கொள்ள வேண்டும் என்பது அவர் வாதம்...
பொறுப்பான வாதத்தை முன் வைத்தால் நல்ல விவாதமாக கொண்டு சொல்லலாம், ஆனால் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் பொழுது கோபம் வருவதை தவிர்க்க முடியவில்லை...

திரைப்படத்திற்கு ஒரு தணிக்கை, தொலைக்காட்சிக்கு என்று ஒரு தணிக்கை குழு, விளம்பரத்திற்கு என்று ஒரு தணிக்கை குழு என்று தனி தனியாக இருப்பது பிரச்சினை என்று கூறியுள்ளார்..

திரைப்பட தணிக்கை குழு சரியான தணிக்கை செய்யாமல், திரைப்படங்களை வெளியிடுவதும், அதை தொலைக்காட்சி துறையினர் அப்படியே  வெளியிட்டு, பாலியல் உணர்ச்சி தூண்டி பார்வையாளர்களை கட்டி போடுவதும், இதை வழிக் கோலாக வைத்து விளம்பர துறையினர் நகைச்சுவை என்ற பெயரில் தவறான செய்திகளை பரப்பியும், பாலியல் உணர்ச்சிகளை தூண்டி பொருட்களை விற்பனை செய்வதும் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும்...

தொலைக்கட்சிகளில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகள் தவறான முன்னுதாரணத்தை கொண்டுள்ளதும், அதை பார்த்து வாய் பொத்தி அமைதியாய் இராமல் எதிர்ப்பை தெரிவித்து போராடாமல் மக்கள் இருப்பதும், விளம்பர நிறுவனங்களுக்கு அல்வா சாப்பிடுவது போல் ஆகி விட்டது...

விளம்பரத்தை தணிக்கை செய்வோம் என்று கிளம்பிய அரசு சாரா நிறுவனம் பல்வேறு தலைவலிகளை உண்டாக்குவதால், அவற்றின் மேல் சேறு பூசும் சங்கதிகளும் நடப்பதை பதிவு செய்துள்ளார்...

தவறு செய்யும் திரை துறையினரையும், தொலைகாட்சி துறையினரையும் விட்டு விட்டு, விளம்பரத்தின் மீது மட்டும் ஏன் கோப படுகிறீர்கள் என்றும், ரொம்ப கிடுக்கி பிடி போட கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்...

திரு. கோகுல் கிருஷ்ணமூர்த்திக்கு கேள்விகள்...

முதலில் மற்றவர்கள் தவறு செய்வதை பொறுத்துக் கொண்டுள்ளோம் என்று கூறியது தவறு... பொறுத்துக் கொள்ளவில்லை; பொருமிக் கொண்டு தான் இருக்கிறோம்...
தொலைக்கட்சிகளில் நடக்கும் கூத்துகளை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறோம்...
அவர்கள் தவறு செய்வதால் இவர்களும் தவறு செய்யலாமே என்று கூறுவதை என்ன என்று சொல்வது என்று தான் புரியவில்லை..

கடைசியாக

விளம்பரங்கள் பொழுது போக்கும் அம்சங்கள் இல்லை. பொழுது போக்கும் அம்சங்களிலேயே சிறுவர்களின் மனம் கேட்டு போகிறது என்று தான் புகை பிடிப்பதையும், மது அருந்துவதையும் காட்டக் கூடாது என்று தடை செய்திருக்கிறார்கள், அப்படி இருக்கையில் மக்கள் மனதை மூளை சலவை செய்வதற்கு என்றே தயாரிக்கும் விளம்பரங்களில் பொய்கள் கலக்கலாம் என்பது என்ன வாதம்...

திரைத்துறையில் நீங்கள் கேட்கும் பெண்களின் தோலுரித்து பார்க்கும் வேலைகள் நடப்பதால் தான், பாலியல் வக்கிரங்கள் நாடெங்கும் அதிகமாகியிருக்கிறது...

உங்களுக்கு பெரிய நிறுவனங்களில் வேலை கிடைக்க வேண்டும் என்றால் அங்கு சென்று ஜால்ரா அடியுங்கள், எங்களுக்கு எந்த கவலையும் இல்லை, மாறாக பலரின் எண்ணங்களை மூளை சலவை செய்வது போல் பேச வேண்டாம்...

நான் என்று எண்ணாமல் தயவு செய்து நாம் என்று எண்ணுவோமே..
http://www.thehindubusinessline.com/opinion/article2227218.ece?homepage=true