ஆசைபடுவதில் ஒன்றும் தப்பில்லை தான், ஆனால் அந்த ஆசை நியாயமானதாக இருந்தால் அது நடப்பதை நாம் எதிர்பார்க்க முடியும்...
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்று ஒரு சொலவடை உண்டு...
அது போல் ஆசைபட்டால், கனவு கனவாகவே போய்விடும் என்பது தான் உண்மை...
பெரிய விலை உயர்ந்த மருத்துவமனைகள் வருவது தவறு இல்லை என்றும், ஆனால் ஏழைகளுக்கான அரசு மருத்துவமனை தரமானதாக இருக்க வேண்டும் என்று ஆசைபட்டிருக்கிறார், பொருளாதார நிபுணர் அமர்த்யா சென்.
அரசு மருத்துவமனைகளின் செயல் படாத நிலை தனியார் மருத்துவமனைகளின் வளர்ச்சிக்கு துணை போகும்,
அரசு தபால் அலுவலங்களின் செயல் படாத நிலை தனியார் கூரியர் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு துணை போகும்..
அரசு தொலைபேசி நிறுவனங்களின் செயல் படாத நிலை தனியார் தொலைபேசி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு துணை போகும்...
அரசு விமான சேவையின் செயல் படாத நிலை தனியார் விமான சேவைகளின் வளர்ச்சிக்கு துணை நிற்கிறது...
என்று அடுக்கி கொண்டே போகலாம்...
இப்படி பட்ட சூழ்நிலையில், தனியார் நிறுவனங்களின் பங்கும் வேண்டும் மற்றும் அரசு நிறுவனங்களும் சிறப்பாக செயல் பட வேண்டும் என்று கோருவது, எப்படி சாத்தியம்...
சரி, தனியார் நிறுவனங்களின் சேவை தான் சிறப்பாக இருக்கிறதே, அவர்களே பார்த்து கொள்ளட்டும் என்று கூறுவது... தனியார் நிறுவனங்களின் சுரண்டி கொழுக்கும் செயலுக்கு துணை போவதாகும்...
பொது உடமை சிந்தனை உள்ள பொருளாதார நிபுணரே இப்படி கூறுவது, முக்கியமான கேள்விகளை என் மனம் அறுவடை செய்கிறது...
குட்டை குழம்பி போயிருந்தால், மீனுக்கு தான் கேடு...
http://www.thehindu.com/news/national/article2215872.ece?homepage=true