மாணவர்களுக்கு புத்தகங்களை கொடுக்க யோசிக்கும் அரசு, மடிக் கணினியை தருவதில் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர்..
புத்தகங்கள் இல்லாமல் கூட மாணவர்கள் இருக்கலாம் ஆனால் மடிக் கணினி இல்லாமல் இருக்கக் கூடாது என்ற எண்ணம் வரவேற்கத்தக்கதே?
ஜூலை மாதம் 11ஆம் தேதி வெளிவந்த செய்திப்படி ஒரு மடிக் கணினிக்கு மதிப்பு 15000 ரூபாய் என்று கூறப் பட்டது..
ஆனால் 9.12 லட்சம் மடிக் கணினிகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ள தொகை 912 கோடி ருபாய் ஆகும். அதன்படி பார்த்தால் ஒரு மடிக்கணினிக்கு ஒதுக்கப் பட்டுள்ள தொகை 10000 ரூபாய்... ஒரு வேளை மீதி தொகையை அடுத்த வருஷம் ஒதுக்குவாங்களோ?
இப்படி எல்லாம் கூத்து தமிழக அரசால் நடந்து கொண்டிருக்கும் பொழுது, எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.. [அநேகமாக பல பேருக்கு வந்திருக்கும்]
சும்மா இருந்து வீட்டில் பார்ப்பதற்காக இலவசமாய் டி.வி. கொடுக்கும் அரசு ஏன் உயிர் காக்கும் ஹெல்மெட்டை இலவசமாக கொடுக்க கூடாது?
மேலே உள்ள இணைப்பிலேயே ஜூலை மாதம் டெண்டர் விட்ட செய்தியும் அதற்கு கீழேயே உள்ளது...