politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

5.10.11

இயற்கை மின்சாரம்

நேற்று எழுதிய பதிவில் என் கண்ணோட்டத்திலேயே நான் எழுதி விட்டதால் படிப்பவர்கள் கண்ணோட்டத்தில் குறிப்பிட மறந்து விட்டேன்...  வைரை சதீஷ் குறிப்பிட்ட உடன் தான் புரிந்தது நான் செய்த தவறு... அவரின் பின்னூட்டம் படித்தவுடன் என் பழைய பதிவில் சிறு மாற்றம் செய்த பின் நான் என்ன அர்த்தத்தில் சொல்ல வந்தேனோ அது நிறைவேறியது.. ஆம் சதீஷ், சூரிய சக்தியில் குறைகள் என்று குறிப்பிட்டது அதை எதிர்ப்பவர்களின் வாதம், அதை கூர்ந்து கவனித்தாலே அது எவ்வளவு அபத்தம் என்று தெரிய வரும்..

ஆமினா இராஜராஜேஸ்வரி 
இருவரும் பகலில் கிடைக்கும் சூரிய சக்தியை இரவில் சேமித்து பயன் படுத்த முடியாதா என்று கேட்டுள்ளனர், அதை நோக்கி தான் இன்றைய ஆய்வு உலகம் சென்று கொண்டிருக்கிறது என்பதை இனைய உலகத்தில் தெரிந்து கொள்ள முடிகிறது... அதற்க்கு விடிவு சிறந்த battery  களை உருவாக்குவதே 


ஆனால் குடிமகன்  கூறுவதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும், "மின்தயாரிப்பு பலவழிகளில் [நீரிலிருந்து சூரிய ஒளியிலிருந்து உயிரினங்களின் கழிவுகளிலிருந்து என எந்த எந்த வழிகளிலெல்லாம் பெரிய ஆபத்து இல்லாமல் மின் உற்பத்தி முடியுமோ] தொடர்ந்து செய்ய வேண்டும்... எதோ ஒரு வழியை மட்டமே நம்பி இருந்தால் பிறகு பிரச்சினை வர வாய்ப்புள்ளது.. மேலும் ஒரே இடத்தில் அதிக முதலீடுகளைக் கொண்டு பெரிய தொழிற்சாலைகளை துவங்காமல் ஆங்காங்கே தேவையான மின்சாரத்தை தாயாரித்துக் கொள்ளும் அளவிற்கு திட்டங்கள் தீட்டப் பட வேண்டும்... மின்னலின் ஆற்றலை கூட சேமிக்க முடியுமா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும்... நாம் நிச்சயம் அணுவிலிருந்து விடுபடலாம் " என்று   நீர்வழி சாலை பற்றிய தன் பதிவை நம் பார்வைக்கு வைக்கிறார்
siva  கூறுவது போல் தூசு solar panel கள் மீது படிந்து விட்டால் என்ன செய்வது என்று கேட்டிருக்கிறார், அவருக்கான பதில் என் பழைய பதிவிலேயே இருந்தது... அது தான் பராமரிப்பு... பராமரிப்பு இல்லை என்றால் எதுவுமே உபயோகப் படாது என்பது சிவாவுக்கும் தெரியும் என்பது என் கருத்து...

விலை மதிப்பற்ற மனித உயிர்களை கருத்தில் கொண்டு அணு உலைக்கு செலவு செய்ததை கிடப்பில் போட வேண்டும் என்று அக்கறைப்படும்  அப்பு மேலும் ஒவ்வொரு வீட்டுக்கும் அல்லது கிராமத்திற்கு என்று தனித்து பிரித்து திட்டமிடும் பொழுது மின்சார தேவையை பூர்த்தி செய்யும் என்கிறார்...

சூரிய சக்திக்கு ஆதரவாய் 
நிரூபன் , thendralsaravanan , shanmugavel ,M.R  MANO நெஞ்சில் மனோ, சென்னை பித்தன், தமிழ்வாசி prakash ஆதரவு கரம் நீட்டும் அதே வேளையில் எச்சரிக்கை குரலாய் ஒலிக்கிறது இருதயம்   அவர்களின் பின்னூட்டம்... அணு கழிவு என்று குறிப்பிடக் கூடாது என்றும் எறிந்து மீதியான எரிபொருள் என்று கூற வேண்டும் என்கிறார்... நீங்கள் சொல்வது அனைத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.. ஆனால் உலகம் முழுவதும், வரும் காலங்களில் அணுக்கழிவை [இப்படி தான் சர்வதேச தரப்பில் கூறுகிறார்கள், பார்க்க விக்கிபீடியா ] கையாளுவதில் உள்ள சிரமங்கள் கூடி கொண்டே போவதாக பயந்து வருகின்றனர்.. அணு செரிவூட்டம் என்பது அணு ஆயுத தயாரிப்புக்கு வழி வகுக்கும் என்பதால் இதில் ஈடுபட பல தடைகள் தற்பொழுது இருந்து வருகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்...

 ராஜா MVS அவர்கள் மழை காலங்களில் சிரமப் பட்டாலும் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டால் பெரிது இல்லை என்று கூறியுள்ளார்.. மேலும் வினவின்  வலை தளத்தையும் சென்று பார்க்க சுட்டி அளித்துள்ளார்... 



கூட்டி கழித்து பார்த்ததில் சூரிய ஒளி சக்தி, காற்றாலை, நீர்வழி சாலை, குப்பைகளை எரிக்கும் incinerator[?] என்று எத்தனையோ ஆபத்தில்லாத வழிகள் இருப்பதாக அறிய முடிகிறது...

ஒரு மணி நேரம் இணையத்தில் உலவும் போதே நமக்கு இவ்வளவு தகவல்கள் கிடைக்கிறது என்றால் ஒவ்வொரு துறையிலும் பல்லாயிரம் நிபுணர்களை கைவசம் வைத்துக் கொண்டிருக்கும் அரசுக்கு இந்த வழிகளை ஆராய சிரமம் இருக்காது என்று எண்ணுகிறேன்...
 


"To steal one person's idea is plagiarism, to steal from many is researchரெவெரி  சி.பி.செந்தில்குமார் நீங்கள் ஆசைபடுவது போல் நான் டாக்குத்தர் என்று பெயர் வாங்க வேண்டாம், நம் மக்கள் நலமாக வாழ்ந்தாலே போதும்...
இவ்வளவு ஆய்வுக்கு பிறகும் நம் பார்வைக்கு சிக்காத ஒரே பதில், ஏன் நம் அரசாங்கம் இவ்வழிகளை ஆராய மாட்டேன் என்கிறது என்பது தான்..



அரசுக்கு நாம் கேட்பது ஒரே ஒரு கேள்வி தான் எங்கள் சார்பாய் முடிவெடுக்க தான் உங்களை நாங்கள் ஆட்சி செய்ய அனுப்பி இருக்கிறோம்... வருங்காலத்தில் பிறக்கப் போகும் பிள்ளைகள் வாழ்வை முடிவெடுக்க அதிகாரம் நமக்கு இல்லை, நாளை பிறக்க போகும் சந்ததியினர் ஏன் இந்த முட்டாள் தனமான காரியத்தில் ஈடுபட்டு அணு உலை அமைத்து எங்கள் வாழ்வில் உலை வைத்தீர்கள் என்று கேட்டால் அதற்க்கு பதில் உங்களிடம் இருக்கிறதா? நிச்சயமாக எங்களிடம் இல்லை....