
மனித உயிருக்கு மதிப்பு என்பது கிடையாது, ஏனென்றால் அது விலை மதிக்க முடியாதது...
இந்த வாக்கியத்தில் முதல் பகுதியை மட்டும் எடுத்துக் கொள்வதே பணத்தை இனப் பெருக்கம் செய்பவர்களின் கொள்கையாக இருக்கிறது..
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மனிதனின் கைகளிலும் அலை பேசி தவழ வேண்டும் என்பது அம்பானியின் கனவு என்று மார் தட்டிக் கொள்வார்கள்... அதை சாதித்து காட்டியதிலும் அந்நிறுவனத்தின் சிறிய பங்கு உள்ளது என்றால் அது மிகை அல்ல...
ஆனால் இந்த அலை பேசி பிரயோகம் ஆரோக்கியமானதா இல்லையா என்று இரு வேறு கருத்துக்கள் உலவி வந்தது...
அலை பேசி பிரயோகம் ஆரோக்கியமானது அல்ல என்று ஒருவர் புறப்பட்டு அதன் காரணத்தையும் முன் வைக்க, உலக சுகாதார மையம் 31 விஞ்ஞானிகளை வைத்து வழ வழ கொழ கொழ என்று ஒரு மாதிரி வரும் வராது என்று அறிக்கை தயார் செய்து... புற்று நோய் உருவாக்கும் காரணிகளின் பட்டியலில் மூன்றாம் பிரிவில் இணைத்து உள்ளனர்...
http://signalnews.com/who-cell-phone-cancer442
இதை எதிர்பார்த்து உக்கார்ந்திருந்த அலை பேசி தயாரிப்பாளர்கள், பொங்கி எழுந்து அவர்கள் முறைக்கு ஒரு ஆராய்ச்சி செய்து, உலக சுகாதார மையமே வராது என்று கூறி விட்டார்கள் என்று பின் பகுதியை பிடித்து தொங்குகின்றனர்..
http://www.hindu.com/2011/06/03/stories/2011060362790900.htm
ஆக இந்த பட்டி மன்றம் இப்போதைக்கு தீர்ப்பு வராது போல் இருக்கிறது...
தமிழன் அலை பேசி உபயோகத்தால் புற்று நோய் வந்து இறப்பானோ இல்லையோ, ஆனால் கண்டிப்பாக எதோ ஒரு சாலையில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டி இறக்க போகிறான் என்பது உறுதி...