politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

13.6.11

திக்கு தெரியாத காட்டில்...


கடந்த முப்பது தினங்களாக பல கேள்விகள் திக்கு தெரியாத காட்டில் அலைந்து கொண்டிருக்கிறது, அதற்கு உண்டான பதில்களை தேடி...

1. லோக் பால் சட்டம் குறித்த விவாதம் நன்றாக சென்று கொண்டிருந்த பொழுது, பூஜையில் கரடி போல இந்த பாபா எதுக்கு வந்தார்?

2. போர் என்றாலே மக்கள் இறக்க தான் செய்வார்கள் என்று திருவாய் மலர்ந்த செல்வி அம்மாவுக்கு இப்படி ஒரு தீர்மானம் போட ஐடியா கொடுத்த ஐடியா மணி யார்?

3. எதன் அடிப்படையில் டாடா அம்பானி போன்றோர் தவறு செய்யவில்லை என்று முடிவுக்கு வந்தனர்? முதலாளி என்ற முறையில் அவர்கள் தவறு செய்யவில்லை என்றால் கலைஞர் தொலைக்காட்சியின் கனிமொழி எதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்?

4. சமச்சீர் கல்வி திட்டம் உடனடியாக செயல்படுத்த பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறிய பிறகு மேல்முறை ஈடு செய்ய உச்ச நீதிமன்றத்தை நாடுவதின் காரணம் என்ன?

5. யார் யாரிடமோ தொலைபேசியில் உரையாடும் நலமாக உள்ள ரஜினி ஏன் ஒரு ஊடகங்களுக்கும் நேரடியாக பேசவில்லை? வேண்டாம், ரசிகர்களிடமாவது பேசியிருக்கலாமே?

6. இலங்கையின் மேல் பொருளாதார தடை கோரும் தமிழக அரசு தூத்துக்குடி கொலோம்போ சொகுசு கப்பல் போக்குவரத்தை எப்படி பார்க்கிறது?

7. இந்த ஆண்டு 2.5 லட்சம் கோடி வசூலிக்கப்படாத வரியை விட்டு வைத்திருக்கும் பொழுது ஏன் பெட்ரோல் மீது விதிக்கப் படும் மனிதாபிமானமற்ற வரிவிதிப்பை தளர்த்தி கொள்ள மறுக்கிறது அரசு...?

8. தனியார் பள்ளி நிறுவனங்களுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்த அரசு, இன்னும் அதை இணையத்தில் வெளியிடாதது ஏன்?

9. உளவுத்துறை முதல் அனைத்து துப்பறியும் இலாகாக்களையும் கைவசம் வைத்துள்ள இந்திய அரசாங்கத்திற்கு அண்ணா ஹசறேவுக்கும் பாபா ராம்தேவுக்கும் கூடா நட்பு உள்ளது என்று ஏன் முதலிலேயே தெரியவில்லை?

10. cag வெளியிட்டுள்ள பெட்ரோலிய நிறுவனங்களில் அரசு செய்த ஊழலை பற்றி உச்ச நீதிமன்றம் எப்பொழுது சாட்டையை சொடுக்கும்?

http://articles.timesofindia.indiatimes.com/2011-06-08/guwahati/29639027_1_royalty-oil-fields-oil-companies