politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

12.9.11

இன்குலாப் ஜிந்தாபாத்

அணு உலைகள் இருக்கும் பகுதியில் பூகம்பம் வந்ததால் ஜப்பான் எவ்வாறு பாதிக்கப் பட்டது என்று உணர்ந்த பின், ஜேர்மனி நாட்டில் அணு உலைகள் அமைக்கப் படாது என்றும், அணு உலைகள் பயன்பாடு படி படியாக குறைத்துக் கொள்ளப் படும் என்றும் கூறியுள்ளது இந்த உலகத்தில் உள்ள வளர்ந்த நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது..

பூகம்ப பகுதியில் நம் தமிழகமும் இணைந்து கொண்டிருப்பது சமீப காலங்களில் ஆங்காங்கே நடுங்கும் பூமி சூசகமாய் தெரிவித்துக் கொண்டிருக்கிறது.. சென்னை, சித்தூர், அரக்கோணம், பண்ருட்டி, திருச்சி என்று பல்வேறு நகர்கள் மெலிதாய் நடுங்கி நடுக்கத்தை கிளப்பி உள்ளது.. 

சுனாமி தாக்கிய பொழுது கல்பாக்கம் அணு மின் நிலையமும் பாதிக்கப் பட்டதாகவும் கதிர் வீச்சு வெளியாகிறது என்றும் வரும் தகவல்களை தேசிய இறையாண்மைக்காக மறைக்கப் பட்டிருக்கலாம் என்ற ஊகமும் உலா வருகிறது...

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு அந்த திட்டம் துவங்கப்பட்ட காலத்திலிருந்தே போராட்டம் துவங்கி விட்டது.. இன்று அது வலுவடைந்து சாகும் வரை உண்ணாவிரதம் என்று முன்னேறி கொண்டிருக்கிறது...

நேற்று நடந்த கலவர சத்தத்தில் இந்த போராட்டத்தின் சத்தம் ஊடகங்களிடையே எடுபட வில்லை என்று தெரிகிறது..

இந்த உண்ணாவிரதத்தில் நம் பதிவர் ஒருவரான கூடல் பாலாவும் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டிருக்கிறார் என்று பதிவு செய்கிறேன்..

இந்த போராட்டம் வெற்றி அடைய அனைவரும் சொல்வோம் சத்தமாக
இன்குலாப் ஜிந்தாபாத்