சிறு வயது முதல் படித்த தசாவதார கதைகளை வெறும் கதைகள் என்று எண்ணி இருக்கும் தருணம் இன்று ஓணம் பண்டிகை குறித்து வெளி வந்த செய்திகளில் எவ்வாறு திரிப்பு வேலைகளும் நடந்தேறியுள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.. [வாமணர் எங்கு இருந்து கொண்டு இவை எல்லாவற்றையும் அளந்தார் என்ற என் சந்தேகம் இன்னும் தீர்க்கப் படாமலே இருக்கிறது]
பண்டிகைகள் என்றாலே வியாபார மூலதனம் என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கும் எனக்கு ஓணம் பண்டிகையில் உள்ள நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது..
சிறு வயதில் இந்திர லோகத்தை மகாபலி களவாடி விட்டதாகவும் அதை ஒடுக்க வாமன அவதாரம் எடுத்தார் விஷ்ணு என்று படித்தது ஞாபகத்தில் பசுமையாய் இருக்கிறது..இந்த கதை கேரள தேசம் தவிர்த்த மற்ற மாநிலங்களில் வேதம் கூறுவதாக பதிவு செய்யப் பட்டுள்ளது..
கேரள மாநிலத்தில் நிலவும் கதைகளில் மகாபலி மிகவும் சந்தோஷமாக தன் தேசத்தை வைத்திருந்ததை பார்க்க பிடிக்காமல் இந்திரன் தன் தம்பியை அனுப்பி வஞ்சகமாய் கொலை செய்துள்ளான் என்பதை படிக்கும் பொழுது இந்த மக்கள் எப்படி இன்னும் அந்த விஷ்ணு என்ற பிம்பத்தை கடவுளாக வழி பட்டு கொண்டு வருகிறார்கள் என்பது தான் புரியாத புதிராய் உள்ளது..
சிறு வயது முதல் கேரள மக்களுக்கு மகாபலி குறித்த பதிவை மிகவும் நல்லவன் என்று தான் உரைத்து வந்துள்ளனர் என்பதை என் மலையாள நண்பரிடமும் கேட்டு உறுதி படுத்திக் கொண்டேன்..
இன்று ஒரு உண்மையை தெரிந்து கொண்டேன், ஆன்மீக கதைகளில் சொருகப் பட்டுள்ள இடைசொருகல்களை பல்வேறு மாநிலத்தில் நிலவும் கதைகளை வைத்து ஒப்பிட்டு பார்த்தால் உண்மை விளங்கும் என்பதை..
இன்று அதை பகிர்ந்து கொள்கிறேன்..
மகாபலி குறித்த மற்ற மாநில கதைகளை படிக்க
மகாபலி குறித்த கேரள மாநில கதையா படிக்க..