மக்கள் மிகவும் எதிர்பார்த்த மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத திட்டத்தை இன்று செயல் படுத்தி உள்ளனர்..
எந்த கட்சி எந்த திட்டம் கொண்டு வந்தாலும் விளம்பரத்திற்காக எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல் படுத்தி விட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, மக்களின் ஆதரவு இல்லை என்று கூறும் நிலை தான் தற்பொழுது உள்ளது...
இன்று புது பொலிவுடன் மீண்டும் செயல் பாட்டுக்கு வரும் அரசு கேபிள் டிவி, பல கேள்விகளுக்கு பதில் இல்லாமல் வருவதே பெருத்த சந்தேகங்களை கிளப்புகிறது..
எஸ்.சி.வி. மற்றும் ஹாத்வே என்ற பெரு முதலாளிகள் இது வரை அடித்து வந்த கொள்ளையில் பங்கு கிடைக்காத சிறுமுதலாளிகள் அரசிடம் கோரிக்கை வைக்க தலை வலி போய் திருகு வலி வந்தது போல் ஆகியிருக்கிறார்கள் கேபிள் டிவி தொழில் செய்யும் சிறு முதலாளிகள்...
அவர்களின் சந்தேகங்களை தினமணி நாளிதழ் அடுக்கி இருக்கிறது, ஆகவே அதை இங்கு மீண்டும் பிரதி எடுக்காமல் பொது மக்களின் சந்தேகங்களை பார்ப்போம்...
1. சன் டிவி இல்லாத தொலைகாட்சிகளை ஓசியில் குடுத்தாலும் பெண்கள் பார்ப்பதில்லை என்ற நிலை தான் தமிழகத்தில் என்று ஒரு பதிவர் எழுதி இருக்கிறார், ஆக அரசு கேபிள் டிவி யின் நிலைமை சன் டிவி வரும் வரை என்ன ஆகும்?
2. முன் கட்டணம் ஏதாவது கொடுக்க வேண்டுமா என்ற கேள்வி யாரும் எங்கும் கேட்கவில்லை, அதற்கான பதிலும் எங்கும் பதியப் படவில்லை...
3.புகார்களை எந்த அலுவலகத்தில் குடுப்பது, வருவாய் துறையிலா அல்லது வேறு ஏதாவது துறை அலுவலகம் இருந்தால் அது எங்கு இருக்கிறது?
4.எழுபது ரூபாய் என்பது அனைத்து வரிகளையும் உள்ளடக்கியா அல்லது வரி தனியாக வசூலிக்கப் படுமா?
6.எத்தனை நாட்களுக்குள் கட்டண தொலைக்காட்சிகள் அரசு டிவி யில் ஒளி பரப்பப் படும்?
7.கல்வி சம்பந்தப் பட்ட discovery , நேஷனல் geography , அனிமல் பிளானெட் ஆகியவையும் ஒளி பரப்பப் படுமா?
ஒவ்வொரு ஊரிலும் உள்ள அரசு கேபிள் டிவி அலுவலகம் முகவரியை அரசு வெளியிட்டால் புது இணைப்பு வாங்க மக்களும் முயற்சி எடுக்கலாம்..
இன்னும் என்ன என்னவோ கேள்விகள் விடை கிடைக்காமல் சுற்றி வந்து கொண்டு தான் இருக்கிறது, விடை கிடைக்குமா என்பது தான் தெரியவில்லை...
ஏற்கனவே கலைஞர் துவக்கிய போதே வரும் ஆனா வராது என்று நொந்து போன நெஞ்சங்கள்..
அதையே சொல்லி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள்...