பரமக்குடி கலவரம்...
ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுக்க புலி போல் உறுமும் சீமான், நேற்று யோசித்து யோசித்து பூனை போல் மெதுவாக பேசியிருக்கிறார்..
அவரது பேச்சில் இருந்து நாம் தெரிந்து கொண்டது ஒன்றே ஒன்று தான், காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பது மட்டுமே அவர் லட்சியம் என்பதும், தமிழர்களை காப்பது அவர் லட்சியம் அல்ல என்பதும்..
தமிழக முதல்வரை பகைத்துக் கொண்டால் காங்கிரஸ் அரசை தோற்கடிக்க போகிறேன் என்று சவால் விடுவது நடக்காது என்பதால் அடக்கி வாசிப்பதாக தெரிகிறது.. எது எப்படியோ..
அவரது பேச்சில் சில உண்மைகளை தெளிவாக்கி விட்டு சென்றுள்ளார்..
மறியலில் ஈடுபட்டது இருநூறு பேர், அதை அடக்க முடியாமலா மூவாயிரம் காவலர்கள் இருந்தனர்?
கலவரமே நடக்காத மதுரையில் ஏன் துப்பாக்கி சூடு நடந்தது?
இது அவர் கேட்டது..
நாம் கேட்பது..
மறியலில் ஈடுபடுவோரை சாதரணமாக கைது செய்வதை தான் பார்த்திருக்கிறோம்.. இங்கு ஏன் தடியடி நடத்தி கலைத்தார்கள்?
கலவரம் நடக்க காரணமாக இருப்பார்கள் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாய் கைது செய்தவர்கள், இந்த கைதை தொடர்ந்து கலவரம் நடக்காது என்று எதை வைத்து கணித்தார்கள்?
ஒரு வேளை கலவரம் நடக்க வேண்டும் என்று வேண்டும் என்றே செய்தது போல் இருக்கிறது..
குட்டி சுவர்க்கம் என்ற வலை பூவில் இது பற்றி நேரடி ரிப்போர்ட் குடுத்திருக்கும் ஆமினா அவர்கள் கலவரம் ஓய்ந்து போன பூமியில் கலவரம் வரும் என்று எதிர்பார்த்தே காவலர் இயங்கியிருப்பதாக பதிவு செய்துள்ளார்..
நேற்று உப்பு சப்பில்லாத விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று கோரியவர்கள் இன்று மனம் மாறி சம்பந்தப் பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று வெளி நடப்பு செய்துள்ளனர்..
காவலர்களுக்கு வக்காலத்து வாங்கும் அரசோ, இது காலம் கடந்த கோரிக்கை என்று தெளிவு படுத்தியிருக்கிறது...
பேருந்துகளிலும், தெருக்களிலும் சாதி தலைவர்களின் பெயரை நீக்கி விட்டால் கலவரம் ஓய்ந்து விடும் என்று என்னும் அரசோ இது போல் குரு பூஜை நடத்துவதையும் ஏன் அனுமதிக்க வேண்டும் என்று ஒரு பதிவர் [நெல்லி.மூர்த்தி என்று நினைக்கிறேன்] கவலை படுகிறார்..
ஏழு தமிழர்களின் மரணம் மனிதர்களை மனிதர்களாய் மதிக்காது அரசு என்று மீண்டும் ஒரு முறை ரத்தத்தில் சரித்திரத்தில் பதிவு செய்து சென்றுள்ளது...
http://www.tamilseythi.com/tamilnaadu/458.html
http://www.tamilseythi.com/tamilnaadu/458.html