politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

1.9.11

ஏன் என்ற கேள்வி..

விநாயகர் பேரை சொல்லி தொப்பை வளர்க்க இன்னொரு நாள்.. 


ஒவ்வொரு ஆன்மீக விழா நாட்களும் வியாபார ரீதியானது என்ற வரலாற்று உண்மை விவாதத்தில் இருக்கும் கால கட்டத்தில் இந்த பதிவு அந்த விவாதத்தை ஒட்டி உள்ளது அல்ல...

இன்றிலிருந்து மூன்றாவது நாள் எத்தனையோ சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கதறி கண்ணீர் விட்டாலும், பெரும்பான்மையோரின் பக்தி சார்ந்த விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள் என்று வீரத் துறைவி சத்தம் போட ஆரம்பித்து விடுவார்... தீபாவளி அன்று பெரும் சத்தம் உள்ள பட்டாசுகளை வெடிக்க கூடாது என்றால், இது இந்து மத பாரம்பரியம் என்று சீனர்களின் வான வேடிக்கை வரலாறை திருத்தி எழுதும் வீரம் அவருக்கு மட்டுமே உண்டு...

விஷயத்திற்கு வருவோம்...

எதற்காக பிள்ளையார் பொம்மைகளை பொது நீர் நிலைகளில் கரைக்க வேண்டும்?
இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப் படுகிறது,

ஒன்று: வரும் மழை காலத்தில் நீர் நிலைகளில் நீர் சேமிக்க எதுவாக களிமண்ணை தோண்டி எடுக்க வேண்டும்... அதனால் இந்த முறை செய்யப் படுகிறது..
[நீர் நிலைகளை தூர் வார எந்த அரசும் நேரடியான முயற்சிகளை எந்த காலத்திலும் எடுத்ததில்லையா என்ற நியாயமான கேள்வி எனக்குள் எழுகிறது..]

இரண்டு: வறண்ட காலங்களில் நீர் நிலைகளை தூர் வாரும் மக்களுக்கு, சம்பளமாக ஒவ்வொரு பிள்ளையார் பொம்மைகளுடன் காசு ஒட்டி போடும் பழக்கம் உள்ளது.. அந்த காசை கொண்டு தான் அவன் குடும்பம் நடத்தினான் என்றும் கதை உண்டு...
[தூர் வாரும் உழைப்பாளிகளுக்கு சம்பளம் குடுக்க கூட எந்த அரசும் தயாராக இல்லை போலிருக்கிறது..]

இன்று செய்தி தாள்களில் புதிதாக பசுமை விநாயகர் பொம்மைகள் விற்பனைக்கு வருவதாக அறிவித்துள்ளனர்.. இது இன்னும் ஒரு வியாபார தந்திரமே ஆகும்..

பிரம்மாண்டமான விநாயகர் பொம்மைகளின் பின்னால் நடக்கும் வசூல் கொள்ளைகளும், கவனிக்காமலே சென்று விடுகிறது..

மனிதன் கடவுளை கண்டுபிடித்தது எதற்கு என்பது விழாக்காலங்களில் நடக்கும் திரை மறைவு வேலைகளை பார்த்தாலே போதும்..