politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

10.9.11

ஏழ்மையை ஒழித்துக் கட்டவா?

மிகவும் அமைதியாக இந்திய அரசு ஒரு உள்குத்து வேலையில் இறங்கியிருப்பதாக புலம்பியிருக்கிறது பிரன்ட் லைன் இருவார இதழ்.. அரசாங்கத்தின் திசை திருப்பும் வேலைகள் மொத்தமும் உணவு பாதுகாப்பு மசோதா மேல் மக்கள் கவனம் திரும்பக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறது என்று சலித்துக் கொண்டிருக்கிறது இந்த இதழ்... அப்படி என்ன தான் உள்குத்து என்று படித்து வெளியே வந்தால்.. ஆஹா கிளம்பிட்டாங்கடா என்று கதற வைக்கிறது இவர்களின் கட்டுரை..


இந்தியாவில் உள்ள மொத்த ரேஷன் கடைகளையும் ஒழித்துக் கட்டி விட்டு புது விதமான கொள்ளையை ஆரம்பிக்க அடித்தளம் போட ஆரம்பித்திருக்கிறார்கள் என்று மட்டும் புரிகிறது.. இனிமேல் உங்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் மானிய விலைக்கு குடுப்பதற்கு பதில் உங்களுக்கு பணமாகவே கொடுத்து விடுகிறார்களாம்.. வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு ரூபாய் ஆயிரம் கொடுப்பதால் கள்ள சந்தையில் செல்லும் மானிய விலை பொருட்களின் நடவடிக்கை குறையுமாம்... உணவு பொருட்களில் அரசு செலவு செய்யும் மானியம் சரியான நபரை சென்றடைவது இல்லையாம்.... ஆகையால் சரியான நபர்களுக்கு மானியத்தை கொண்டு சேர்க்க இதை விட நல்ல வழிமுறையும் அரசுக்கு தெரியவில்லையாம்.. 

1. தானிய பொருட்களை அரசு நேரடியாக கொள்முதல் செய்வதை நிறுத்திக் கொள்ளவும்..
2. ஊக வணிகத்தில் தானிய பொருட்களின் மேல் விலை ஏற்றத்தை அதிகப் படுத்தவும்..
3. செயற்கையான தட்டுபாட்டை வரவழைத்து கொள்ளை அடிக்கவும்..
4. பல்வேறு அரசு ஊழியர்களின் சம்பளத்தை செலவிடுவதை தவிர்க்கவும்...
5. மொத்தத்தில் பெரும் முதலாளிகளுக்கு தீனி போடுவதற்கே இந்த திட்டம் துணை புரியும் என்பது விவரம் புரியாதவர்களுக்கும் புரியும்...

ஏழைகள் இல்லா உலகத்தை படைக்க ஏழைகளை ஒழித்துக் கட்டுவதை விட வேறு வழி இல்லை போலிருக்கிறது..