அரசு கேபிள் தொலைக்காட்சி திட்டத்தில் காட்டிய அதே அவசரத்தை மாணவர்களுக்கு இலவசமாய் மடிக்கணினி குடுக்கும் திட்டத்திலும் காட்டியிருப்பதாக இன்று இந்து நாளிதழில் வெளியான செய்தி பறை சாற்றுகிறது..
முதன் முதலில் டெண்டர் கோரப் பட்ட பொழுது மடிக்கணினியில் என்ன என்ன இருக்க வேண்டும் என்று வரை அறுக்கப் பட்டது..
அதன் படி விவரக்குறிப்பு
15' monitor, 2 gb ram, 320 gb hd, dvd drive, webcam, wireless, 2.1 ghz processor, windows starter edition & linux. 3yrs warranty
ஆனால் இப்பொழுது வெளியாகியுள்ள தகவல்படி, இந்த விவரக் குறிப்பு உள்ள மடிக்கணினியை 18000 கும் கீழே தர முடியாது என்பதாக தான் கணினி தயாரிப்பு நிறுவனங்கள் எண்ணுகின்றன என்பது குடுக்கப் பட்டுள்ள டெண்டேர்களில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது...
அதனால் இப்பொழுது டெண்டர்களை சீர்திருத்தி வெளியிடும் நடவடிக்கை நடந்தேறி வருகிறது,
160 gb hd, windows starter edition only, one year warranty
மடிக் கணினியை வழங்க இன்னும் பத்தே நாட்களே மீதம் உள்ள நிலையில் திருத்தப் பட்டுள்ள டெண்டரை கணக்கில் எடுத்து மீண்டும் டெண்டர் அனுப்பி கொள்முதல் செய்வதற்குள் விளங்கி விடும் என்றே தோன்றுகிறது.. [டெண்டர் செப்டம்பர் 21 வரை திறந்திருக்கும்]
ஆக சொல்லியபடி அண்ணா பிறந்த நாளில் மடிக் கணிணி கொடுக்கப் போவதில்லை என்று உறுதியாகிறது..
மேலும், இதில் வைரஸ் பாதிக்காத லினக்ஸ் இயக்க அமைப்பு நிறுவி தரப் பட மாட்டாது என்று கூறியுள்ளனர்..
இதற்கு கொடுக்கும் விளக்கம் தான் நம்மை கேனயன்களாய் ஆக்குகிறது..
லினக்ஸ் நிறுவி தருவதற்கு நூறு ரூபாய் செலவாகுவதால் அதை விலை குறைக்கும் முயற்ச்சியில் வேண்டாம் என்று விட்டு விட்டார்களாம்.. இந்த முயற்ச்சிக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்...
இது அநேகமாக வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் விற்கும் நிறுவனங்களுக்கு கை கொடுக்க போகிறது என்பது திண்ணம்...
கோணல்கள் வளர்ந்து கொண்டே போவதை ரசிக்க முடியவில்லை...
ஏனெனில் அவதிப் படப் போவது மக்களே...