கூடல் பாலாவின் புது பதிவு என் காதில் இன்னும் ரீங்காரமிட்டு கொண்டே இருக்கிறது.. என்ன செய்யலாம்? எப்படி செய்யலாம்? என்ற எண்ணங்கள் என் நினைவுகளில்...
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட சொல்லி நடக்கும் போராட்டத்தில் வைகோ வும் ஆதரவு தெரிவித்தது கண் துடைப்பாய் இருக்க கூடாது என்று என் மனம் கதறிக் கொண்டே இருக்கிறது..
பிரான்ஸ் நாட்டில் அணு உலையில் நடந்த வெடி விபத்து காதில் விழுந்த பொழுது அவசரம் தொற்றிக் கொண்டது..
ஆனால் குழம்பிய குட்டையில் எதுவும் சிக்கவில்லை என்பதால் உங்கள் எண்ணங்களை பின்னூட்டங்களில் செலுத்திடுங்கள், அதை வரை முறை படுத்தி நம் பங்குக்கு என்ன செய்யலாம் என்று அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன்..
கூடங்குளம்
மூடும் விதம்
வாடும் நிதம்
உள்ளங்களுக்கு..
போராட
ஊக்கம் தர
உரக்க சொல்வோம்
மீண்டும் ஒருமுறை
இன்குலாப் ஜிந்தாபாத்..