politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

7.9.11

நியாயத்தை எதிர்பார்த்து..

கடந்த மூன்று மாதங்களில் எத்தனையோ சறுக்கல்கள், அ.தி.மு.க விற்கும், தி.மு.க விற்கும்.. இதில் பெரும் பாதிப்பை சந்தித்து வருவது தி.மு.க வே.. அ. தி.மு.க வின் பாதிப்பை கணிப்பதற்கு இன்னும் ஐந்து வருடங்கள் ஆகும் என்பதால் மூச்சு விட நேரமிருக்கிறது..
எலியும் பூனையுமாய் இவர்கள் பல விஷயங்களில் அடித்துக் கொண்டாலும், சிமெண்ட் மற்றும் மதுபானங்கள் அரசாங்க கொள்முதலில் இரு கட்சிகளை சேர்ந்த நிறுவனங்களுக்கும் சமமான ஆர்டர் கிடைப்பதாக தகவல் சொல்கிறது.. எது எப்படியோ எவ்வளவோ குளறுபடிகளில் விசாரணை கமிஷன் வைத்து நீதியை நிலை நாட்டப் போகிறோம் என்று கூறும் தற்போதைய தமிழக அரசு, நேற்று நடந்த விஷயத்தில் அமைதியாக காய் நகர்த்துவது இது போல் உள்ளடி விளையாட்டோ என்று நினைக்க தோன்றுகிறது..

எல்லா விசாரணை கமிஷனிலும் நீதிபதிகளை அமர்த்தும் அரசு, உக்கடம் பகுதியில் ஏழைகளுக்காக கட்டப் பட்ட வீடுகள் உள்வாங்கியதால், அவற்றின் கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப் பட்டதுடன், அண்ணா பல்கலை கழக முனிவரை வைத்து விசாரணையை தொடங்க திட்டமிட்டுள்ளது... பல்வேறு கோடிகளை முழுங்கிய இந்த கட்டிடங்களை பூமி அப்படியே முழுங்குவதை பார்த்தால் சரியான திட்டமிடுதலும் வழிகாட்டுதலும் இல்லாமல் இந்த சிக்கல் உண்டாகியிருப்பதாக தெரிகிறது..

எனது சந்தேகம் என்ன என்றால் இந்த அரசில் மண் பரிசோதனை செய்வதற்கு என்று எந்த நிபுணர்களும் இல்லையா?
ஏழைகளுக்கான வீடு தானே, என்று மாணவர்களை வைத்து மண் பரிசோதனை செய்யப் பட்டதா?
ஏற்கனவே இரண்டு முறை உள்வாங்கியது என்பது ஆட்சிக்கு வந்த உடனே அமைச்சருக்கு தெரியாதா?

இந்த கட்டிடங்களை இடித்து விடுவதால் உங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை, எங்கள் பணங்களுக்கு தான் நஷ்டம் ஏற்படப் போகிறது.. ஆகையால் இந்த முறைகேட்டை சரியான முறையில் விசாரித்து முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரையும் தண்டிப்பது ஒன்றே இந்த அரசின் கோணலான வழிமுறையில் இருந்து சீராவதர்க்கான வழி...

இடிந்து விழுந்து உயிர் போனவுடன் ஒரு லட்சம் என்று இழப்பீடு தருவதற்கு பதில், கட்டும் கட்டிடங்களை தரமுடன் கட்டி பெயர் வாங்குவதற்கு பதில், நஷ்டங்களையும் ஏற்படுத்துவது மக்கள் பணம் மேல் அக்கறை இல்லாததை காட்டுகிறது...