politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

3.9.11

மாற்றம் மட்டுமே மாறாதது

உடற்கல்வி துறையில் மருத்துவ பட்டம் வாங்கிய என் கடைக்கு வரும் வாடிக்கையாளர் அமெரிக்காவில் நடக்க வேண்டிய ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள விசா மறுக்கப் பட்டுள்ளதால் நொந்து போய் விட்டார்.. கனவுகளுடன் சென்ற அவருக்கு எதோ ஒரு காரணத்தை சொல்லி better luck next time என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டனர்..

விசாவுக்காக கட்டிய 140 டாலருக்கும் நாமம் போட்டு விட்டனர் என்று புலம்பினார்..
அப்பொழுது தான் எனக்கு ஒரு உண்மை தெரிந்தது அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்க 140 டாலர் கட்டுவது விசா மறுக்கும் பட்சத்தில் திருப்பி கொடுக்க மாட்டார்கள் என்று...

ஜக்கம்மா கிட்ட போட்ட காசு திரும்பி வராது என்று மயில்சாமி கூறும் காட்சி கண்ணுக்கு முன் சற்று நிலழாடியது...

என்ன காரணம் சொல்கிறார்கள் விசா மறுக்கப் பட்டதற்கு..
நீங்கள் இந்தியாவுக்கே திரும்பி விடுவீர்கள் என்று போதிய சுய ஆதாரம் காட்டவில்லை என்று விசா மறுக்கப் பட்டதாக தெரிவித்துள்ளனர்..

இன்று வெளியாகியுள்ள விகிலீக்ஸ் வலை தளத்தில் இதே பிரச்சினையை Blake என்பவர் தெரிவித்துள்ளார்..
அமெரிக்க அரசின் விசா மறுப்பால் இந்திய அமெரிக்க உறவு எப்படி வியாபார ரீதியாக பாதிப்படைந்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்..
இந்திய அணு விஞ்ஞானிகளுக்கு அமெரிக்காவில் நடக்கும் மாநாட்டில் பங்கு ஏற்க விசா மறுக்க படுவதால் அவர்கள் வேறு நாட்டுடன் வியாபார ரீதியாக பலப் பட்டு விடுவதாக கவலை தெரிவித்துள்ளார்... 

சென்னை அண்ணா சாலையில் கால் கடுக்க வெயிலும் மழையும் பாராமல் அமெரிக்காவுக்கு செல்ல நிற்கும் மக்களை கண்டு எத்தனையோ முறை வருத்தப் பட்டிருக்கிறேன்... அமெரிக்கா மோகம் என்று திட்டியும் இருக்கிறேன்.. அவர்களில் அநேகர் அமெரிக்காவில் தங்கி விடும் எண்ணத்தில் இல்லை என்பதை சமீப காலங்களில் தெரிந்து கொண்டுள்ளேன்... தமிழக அரசும், அமெரிக்க அரசும் வெளியில் நிற்கும் மக்களுக்கு எந்த விதமான வசதிகளையும் செய்து கொடுக்க போவதில்லை என்பது தெளிவாகிறது...[சமீபத்தில் பாதி தூரம் நிழற் குடை அமைத்துள்ளதாக தெரிகிறது என்று சென்னை நண்பரிடம் உறுதி படுத்தி கொண்டேன்

இப்படி மறுக்கப் படும் விசாவில் வரும் வருமானத்தை நம்பி அமெரிக்கா இருக்காது என்ற நம்பிக்கையில் நான் இல்லை...

இந்த வருமானத்தை நம்பி அமெரிக்கா அரசு இல்லை என்றால் வரும் தொகையில் சில பங்கை வெளியில் நிற்கும் மனிதர்களை மனிதர்களாக நடத்துவதற்கு ஒதுக்கலாமே..