politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

14.7.11

தீர்வாகாது...

பிரதம மந்திரி ஆகும் அளவுக்கு வளர்ந்து விட்டார் என்று ஒருவர் பிதற்றியது, பிதற்றல் தான் என்று ஒத்துக் கொள்ளும் அளவுக்கு வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.. ராகுல்...

தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து அவர் கொடுத்திருக்கும் அறிக்கையில், இந்திய அரசின் செயல்பாட்டால், 99 % தாக்குதல் முறியடிக்கப் பட்டு 1 % தாக்குதல் மட்டுமே நடந்தேறி விட்டதாக கூறியுள்ளார்... இனி வரும் காலங்களில் இந்த 1 % தாக்குதலும் முறியடிக்கப் படும் என்று கூறியுள்ளார்... ஒரு பிரச்சினையை மேல் மட்டத்தில் பார்ப்பதால் உண்டாகும் பதில் இது... யாராவது இவருக்கு பேச கற்று கொடுத்தால் நன்றாக இருக்கும்...

தீவிரவாதத்தின் ஆணிவேர் மத வெறுப்போ, சாதி வெறுப்போ அல்ல, மாறாக வேலை வாய்ப்பின்மையும், வர்க்கப் பிரிவினயுமே ஆகும்... வாழ வழி அற்று போகும் நிலையில் உள்ளவர்களை சிலர் தங்கள் சுயநலத்திற்காக இது போல் காரியங்களில் ஈடுபட வைக்கிறார்கள்... இது போல் நிலையை உருவாக்குவதில் அரசின் பங்கு முழு முதல் காரணம் ஆகும்.. இது போன்ற செயல்களுக்கு மற்ற நாடுகளையோ, மத அமைப்புகளையோ குற்றம் சாட்டும் முன்பு இதை தடுக்க அரசு என்ன செய்தது என்று கேட்டுக் கொண்டால் நன்றாக் இருக்கும்...

சுரண்டல்கள் இருக்கும் வரை சமுதாயத்தில் வெடிகள் வெடித்து கொண்டே தான் இருக்கும்... வெடித்து முடித்த பின் வேடிக்கை பார்ப்பதை விட்டு விட்டு வேலை வாய்ப்பை உருவாக்கி வர்க்க பிரிவினையை உருவாக்கினால் 100 % அமைதி உலகம் எங்கும் பரவி நிற்கும்...
அதுவே இப்பிரச்சினையை அணுக சரியான முறை...

தீவிரவாத செயல்பாடு ஒரு பிரச்சினைகளுக்கு தீர்வு ஆகாது, அதே போல அடக்கு முறையும் தீவிர வாத பிரச்சினைக்கு தீர்வு ஆகாது...

http://ibnlive.in.com/generalnewsfeed/news/difficult-to-stop-all-terrorist-attacks-rahul/756532.html