politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

5.7.11

நேர் எதிர்...


positive thinking நேர்மறை சிந்தனை ...
negative thinking எதிர்மறை சிந்தனை ...

பள்ளி படிப்பை முடித்து இறகு முளைத்து பறக்க துடிக்கும் ஓவ்வொருவரிடமும் கூறப்படும் ஆலோசனை பெரும்பாலும் மேற்கூறிய இரு பண்புகளை கொண்டதாக இருக்கும்...

கல்லூரியில் விரிவுரையாளர்கள்..
பணியிடத்தில் மேலாளர்கள்...
பெரும்பாலும் நண்பர்கள்...

சரி...
எது நேர்மறை சிந்தனை?
யாரும் இதை பற்றி கேள்வியே கேட்பதில்லை...
பொதுவான கருத்து என்ன என்றால் நல்ல சிந்தனை, முடியும் என்னும் சிந்தனை, என்று பொருள்படும்படி எடுத்துக் கொள்கிறார்கள்...

உண்மையில், எதுவும் என்னால் முடியும் என்பது எதிர்மறை சிந்தனை ஆகும்... பல செயல்கள் தனி மனித முயற்சியில் நடந்தேறுவது இல்லை... பல முகம் தெரியாத நபர்களின் மறைமுக ஒத்துழைப்பும் ஒரு செயல் நடப்பதற்கு துணை போகிறது...
மனிதனால் எல்லாவற்றையும் செய்ய முடியாது...
செய்ய முடியாததை என்னால் செய்ய முடியாது என்று ஒத்துக் கொள்வது எதிர் மறை சிந்தனை அல்ல அது அப்பட்டமான நேர்மறை சிந்தனை...

ஊடகங்களில் வரும் அனைத்து செய்திகளும் எதிர்மறை சிந்தனை என்பதும் தவறு..
தவறுகளை தட்டி கேட்பதும் நேர்மறை சிந்தனை...
உண்மையில் நடக்கும் தவறுகளை கண்டும் காணாமல் இருந்து விடுவது எதிர்மறை சிந்தனை தான்...

எனக்கு மிகவும் பிடித்த வாசகம்:
"இந்த உலகில் நடக்கும் பல்வேறு கொடுமைகளுக்கு காரணம் தீயவர்களின் செய்கை அல்ல, வாய் மூடி ஒன்றும் செய்யாமல் இருக்கும் நல்லவர்களின் செய்கையால் ஆகும்."

நீங்கள் நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்து அது தான் நிலவு என்ற முடிவுக்கு வராதீர்கள், அது எதிர்மறை...
நிலவின் இன்னும் ஒரு பக்கம் நம் கண்ணுக்கு தெரியாமல் இருக்கிறது என்று ஒத்துக் கொள்ளுங்கள் அது நேர்மறை...

நான் நேர்மறையாளன்... நீங்க?