நில அபகரிப்பு என்பது கடந்த தி.மு.க ஆட்சியில் தான் அதிகம் நடந்தது என்றும், ஆகையால் அதை பற்றி விசாரிப்பது பழிவாங்கல் நடவடிக்கை இல்லை என்பது தோழர்(?). ராம கிருஷ்ணனின் அறிக்கை...
தொடரும் நம் கேள்விகள்...
-பழிவாங்கல் நடவடிக்கை இல்லை என்றால் ஏன் 2006 - 2011 கால வரையில் உள்ள மோசடிகளை பற்றி மட்டும் விசாரிக்க வேண்டும்...
-ஒரு ஆளும் கட்சி அமைச்சர் மேலேயே சொந்த கட்சியினரே புகார் தெரிவித்து மேலிட சமரசத்திற்கு பின்பு, புகார் திரும்ப பெறப் பட்டது.. அது பொய் புகார் என்றால் புகார் கொடுத்தவரின் மேல் நடவடிக்கை என்ன? அது உண்மை என்றால் அமைச்சர் மீதான நடவடிக்கை என்ன?
-அதிகார போதை தலைக்கு ஏறியவர்கள் இது போன்ற சமயங்களில் இப்படி தான் சட்டத்தை கையிலே எடுப்பார்கள் என்பது அரசு என்னும் புத்தகத்தை படித்த உங்களுக்கு தெரியாதா?
-அப்படி இருந்தும் பொதுவுடைமை தத்துவங்களை, லாப நோக்கத்திற்காக மட்டும் முதலாளித்துவ கொள்கைகளிடம் அடகு வைப்பது நியாயமா?
நில அபகரிப்பு குறித்து கண்டிப்பாக விசாரணை செய்ய வேண்டும், ஆனால் அது ஒரு தலை பட்சமாக இருக்க கூடாது என்பது தான் எங்கள் கவலை... தகர டப்பாவில் உண்டியல் செய்து காசு வசூலிப்பது நம் இயக்கத்தின் பெருமை, அதை விட்டு அந்த சத்தத்தை ஜால்ரா சத்தமாக மாற்றாமல் இருந்தால் நாங்கள் உற்சாகமாக இருப்போம்...
தூக்கத்தில் கூட பொதுவுடைமை தத்துவங்களை கனவு கண்டு உறங்கும் தொண்டர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்,
கட்சிக்கு செலவு வைக்க கூடாது என்று சுவரொட்டிகளை தூக்கம் கெடுத்து ஒட்டி விட்டு வரும் தொண்டர்கள் பலர் இருக்கிறார்கள்...
பேசுவதற்கு முன்பு அவர்களையும் சிறிது நேரம் சிந்தியுங்கள்...