இந்த அரசு வலைதளத்தில் நுழைந்தால் நம்மை முகத்தில் அடிப்பது ஒரு அறிவிப்பு..
சமச்சீர் கல்வியின் பாடத்திட்டப்படி, வகுப்பு வாரியாக, எந்தெந்த தனியார் பாட நூல் நிறுவனங்களின் புத்தகத்தை படிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்...
கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், ஒரு வகுப்புக்கு பல புத்தகங்களை பார்த்து குறிப்பு எடுத்து படித்து தேர்வு எழுதுவது அனைவருக்கும் தெரிந்ததே.. அதே முறை பள்ளி கூடங்களில் அமுலுக்கு கொண்டு வருகிறார்கள் போல் தெரிகிறது...
எது எப்படியோ நம்ம கேப்டன் ஆசைப்பட்ட குதிரை கிடைச்சிடும் போல் இருக்கிறது..
உணவகங்களில் முதலில் போய் சாப்பிடுபவர்களுக்கு கெட்டி சட்னி கிடைக்கும், அதுவே கட்ட கடைசி ஆளாய் இருந்தால் தண்ணி தான் சட்னியாய் கிடைக்கும்... அது போல் நாளாக நாளாக சமச்சீர் கல்வி, நீர்த்து போன கல்வியாய் ஆகியிருக்கும் போல் இருக்கு...
என்ன ஆனாலும் நம்ம தமிழக அரசு வழக்கறிஞரின் வாதம், பலரை குழப்பி இருப்பது நிச்சயம்... இவர் நமக்கு வாதாடுகிறாரா இல்லை, எதிர் கட்சிக்கு வாதாடுகிறாரா என்று தெரியாத அளவுக்கு ஒரு சிறந்த வாதத்தை வைத்துள்ளார்..
மார்க்கெட்டிங் செய்பவர்களின் தாரக மந்திரமான, புரிய வை இல்லை என்றால் குழப்பு [convince or confuse ] என்ற நிலைபாட்டை எடுத்து விட்டார் போலும்...
கொஞ்சம் மனசாட்சி உள்ளவர் என்றால், ஆலோசனைகளை வழங்க தகுதியான நபர்கள் இல்லை என்று மொத்த தமிழனையும் குறை கூறாமல்.. ஆலோசனைகளை ஏற்று கொள்ளும் மன நிலையில் ஒருவர் இல்லை என்று கூறி தமிழக மக்களின் எரியும் வயிறை அணைத்திருக்கலாம்..