politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

13.7.11

பாதுகாப்பில் இருந்து, வளர்ச்சிக்கு...


நில ஆர்ஜிதம்..

மேற்கு வங்க அரசை தூக்கி அடித்தது...

உத்தர பிரதேசத்தை ஆட்டம் காண செய்து கொண்டிருக்கிறது...

ஒரு தனியார் துறை அசுர வளர்ச்சி அடையும் பொழுது, மேலும் வளர்ச்சி அடையும் நோக்கில் மூன்று கால் பாய்ச்சலில் சுரண்டி கொழுக்க புறப்பட்டு விடுகிறார்கள்... அவர்களே நேரடியாக நிலம் கொள்முதல் செய்யும் பொழுது, இடை தரகர்கள் தான் மிகவும் பயன் அடைகிறார்கள்... இது பிடிக்காத தனியார் துறை தாங்கள் வளர்ச்சி அடையும் நோக்கில் அரசிடம் பேசி அரசு விலைக்கு நிலத்தை வாங்கி லாபம் அடைகிறார்கள்...

இதை தடுக்க புறப்பட்ட, தேசிய ஆலோசனை குழு அரசு விலையை விட 60 மடங்கு அதிக விலைக்கு நிலத்தை வாங்கி தர ஒவ்வொரு மாநில அரசும் முயற்சி எடுக்க வேண்டும் என்று ஆலோசனை வெளியிட்டது...

எதையோ பிடிக்க போய் எதோ ஆகிறதே என்று பயந்த தனியார் துறை, திட்டம் போட்டு புதிய நில சட்டத்தை தயாரிக்க அரசின் யோசனையை கேட்டது... அதன்படி அரசு வெளியிட்ட புதிய நில சட்டம் மேற்கூறிய ஆலோசனையை நிராகரித்து, ஒரு மாதிரி குழப்பி வெளியிட்டது...[ முப்பது சதவிகிதம் மட்டுமே மாநில அரசு வாங்கி தர வேண்டும் என்றும், அரசு விலையை விட 60 % அதிகம் வாங்கலாம் என்றும் தயாரித்தனர்].

இப்பொழுது அமைச்சரவை மாற்றத்தில் பல தனியார் நிறுவனங்களுக்கும் சுற்று புற சூழல் அமைச்சகத்தில் தண்ணி காட்டி கொண்டிருந்த ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் கிராமப்புற வளர்ச்சி அமைச்சகத்துக்கு மாற்றப் பட்ட பின் தனது முத்திரையை பதிக்க ஆரம்பித்து விட்டார்...

இதற்கு முன் தயாரித்த சட்டத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு தேசிய ஆலோசனை குழுவின் பரிந்துரையை அமுல்படுத்த தயாராகி விட்டார்...
அதன் படி அடுத்த வார இறுதிக்குள், சட்டத்தின் நகல் இணையத்தில் வெளியிடப் பட்டு மக்களின் கருத்து கேட்கப் படும்... ஆலோசனைகள் வரவேற்கப் படும்... வரும் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு சட்டம் பாராளுமன்றத்தில் இந்த மழை கால கூட்டத் தொடரில் விவாதித்து அமுலுக்கு கொண்டு வரப்படும்...
உங்கள் ஆலோசனைகளை பதிவு செய்ய ஆவலுடன் எதிர்பாருங்கள்...

http://economictimes.indiatimes.com/news/politics/nation/land-bill-draft-will-go-online-for-debate-jairam/articleshow/9211822.cms