politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

29.7.11

ஆடுவோமில்ல... ஓடுவோமில்ல...

பாபா ராம்தேவ் தொடங்கிய கண்ணாமூச்சி ஆட்டம் அவரை சார்ந்தவர்களுக்கும் தொடர்கிறது...
 
காவல் துறையினர் கைது செய்ய வந்துள்ளார்கள் என்று தெரிந்த உடனே, தன்னை நம்பி வந்திருந்த அத்தனை மக்களின் நிலையையும் சிந்திக்காமல் சுடிதார் போட்டு கொண்டு ஓடியதால், அவரின் சிஷ்யனும் அவரது வழியை கடை பிடிக்கிறார்... இவர் ஓடி போனதால், அடி வாங்காமல் இவர் தப்பித்தார், ஆனால் அப்பாவி மக்கள் மிருகத் தனமான அடக்கு முறையை சந்திக்க நேர்ந்தது..

இவரது சிஷ்யனான பாலகிருஷ்ணாவும் காவல் துறையினர் தேடுவதை தெரிந்து கொண்டு தலை மறைவாகி கண்ணாமூச்சி ஆடி விட்டு, இப்பொழுது முன் ஜாமீன் கிடைத்ததால் வெளியில் வந்துள்ளார்..

கடவுளை நம்பும் அனைத்து சாமியார்களும் மாட்டி கொள்ளும் பொழுது, கடவுளை நம்பாமல் ஏன் ஜாமீன் வாங்குகிறார்கள் என்று தான் தெரியவில்லை...
கோவிலுக்கு சென்று காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடாது என்று வேண்டிக் கொண்டால் கடவுள் காப்பாற்ற மாட்டாரா?

நான் சிறைச்சாலைக்கு செல்ல நேரிட்டால், கடவுள் என்னுடன் சிறைச்சாலைக்கே வந்து விடுவார்.. கடவுளை சிறையில் அடைத்த பாவம் எனக்கு நேரக் கூடாது என்று தான் நீதிமன்றத்தை அணுகினேன் என்று கூறினாலும் கூறுவார்கள்...

எது நடக்கிறதோ, அது நன்றாக நடக்கிறதோ?