politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

24.7.11

இருள் விலகும் நேரம்..

 வள்ளுவனின் திருக்குறளை பெருமையாக பேசும் யாவரும் மறந்து விடும் ஒரே குறள், கற்க கசடற... 
 
எதையாவது படிக்கும் போது அதை சந்தேகத்தோடு அணுகி, அனைத்து சந்தேகங்களையும் களைந்து கொண்ட பின்பு அதை வாழ்க்கை நடைமுறையில் பயன் படுத்த வேண்டும் என்ற அருமையான தத்துவம் கொண்டது இந்த குறள்.. அந்த குறள் படி தான் நான் நடக்கிறேன் என்று மனசாட்சியுடன் பதில் அளிப்பவர்கள் ஆயிரம் பேரில் ஒருவராக தான் இருக்க முடியும் என்பது என் எண்ணம்...

கர்நாடக மாநிலத்தில் பகவத் கீதையை அனைவரும் படிக்க வேண்டும் என்று அரசாங்கம் கூறியிருப்பதற்கு எதிர்ப்பு  கிளம்பி இருக்கிறது.. பகவத் கீதையோ, அல்லது மற்ற எந்த மதம் சார்ந்த நூல்களையும் படிக்கும் எவருக்கும் பல்லாயிரக் கணக்கான சந்தேகங்கள் எழுவது உறுதி... அந்த சந்தேகங்களுக்கு பதில் கிடைக்காமல் இருப்பதும் உண்மை.. சந்தேகங்களுக்கான பதில் பெரும்பாலும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது என்று தான் வருகிறது...

ஆகையால் மாணவர்கள் அனைவரும் மதம் சார்ந்த அனைத்து புத்தகங்களையும் படித்து சந்தேகத்தை வளர்த்துக் கொள்ளுங்கள், கேள்வி கேளுங்கள், கண்டிப்பாக கேள்விக்கு பதில் கிடைக்காது...

உங்கள் மதம் சார்ந்த கேள்விகளுக்கான பதில்களை பெற பகத் சிங்கின் புத்தகங்களை படியுங்கள், அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்... 

ஒரு திரைப்படத்தில் வரும் வசனம், 
"மக்களின் பிரச்சினைகள் ஒழிந்து, மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கையில் மிஞ்சி இருக்கும் என்ற நிலை வரும் பொழுது கடவுள் தானாகவே காணாமல் போய் விடுவார், அதனால் கடவுள் இல்லை என்று கூவுவதை விட, பிரச்சினைகளுக்கு பதில் தேடுங்கள்' என்று இயக்குனர் கூறியிருப்பார்...

அவருக்கு நம் பதில்,

கடவுள் என்று ஒருவர் பின்னால் ஓடுவதால் தான் இவ்வளவு பிரச்சினைகளும், பிரச்சினைகள் உச்ச கட்டத்தை நெருங்கும் பொழுது, மக்களே தானாக கடவுளை புறக்கணிப்பார்கள்...

எத்தனையோ புதிய கோவில்களில் கூட்டம் அதிகரிக்கிறது,
பழைய கூட்டம் நிறைந்த கோவில்களில் கூட்டம் நிரந்தரமாகி உள்ளது...
இது மக்கள் பழைய கடவுளின் மேல் நம்பிக்கை இழந்து புதிய கடவுள் மேல் நம்பிக்கை வைப்பதையே காட்டுகிறது...

மக்கள் இன்னும் புரிந்து கொள்ளாதது ஒன்றே ஒன்று தான், ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்கள்  தான் மாறிக் கொண்டிருக்கிறார்கள், காட்சிகள் அல்ல என்பதை தான்...

புரிந்து கொள்ளும் பொழுது விடிந்து இருக்கும்...