politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

4.7.11

டும் டும்... ...தன் வாயால் கெடும்...


குப்புற விழுந்த பிறகு மீசையில் மண் ஒட்டவில்லை என்பதை, நிரூபிக்க காங்கிரஸ் அரசு மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்து விடுவது தற்செயலானதா இல்லை முன்னெச்செரிக்கை இல்லாததாலா என்று தெரியவில்லை...

விலை வாசி உயர்வுக்கு காங்கிரஸ் அரசு காரணம் அல்ல என்று பிரச்சாரம் செய்யும் படி காங்கிரஸ் கட்சியில் கட்டளை போட பட்டிருக்கிறது, விலை வாசியை கட்டு படுத்துவதிலும் காங்கிரஸ் அரசு எதுவும் செய்யவில்லை என்பது தான் மக்களின் கவலை... ஆனால், இன்றைய விவாதம் இது அல்ல...

சில நாட்கள் முன்பு நமது ப.சி., அரசை காப்பாற்ற தந்த பிரத்யேகமான பேட்டியில், போகிற போக்கில் நமது பிரதமர் பேச வேண்டும் என்று தான் மக்கள் விரும்புகிறார்கள் என்று கொளுத்தி விட்டு விட்டு சென்று விட்டார்...

என்னடா இது என்று வேண்டா வெறுப்பாய் உள்ளுக்குள் இருந்தாலும், முகத்தில் சிரிப்பு திரை போட்டு கொண்டு கொடுத்த பேட்டியில் எரிகிற கொள்ளிக் கட்டையை எடுத்து சொரிந்து கொண்டார்...

மனதில் பட்டதை பட்ட வர்த்தனமாய் பேசும் மணி ஷங்கர் ஐயர் தமக்கு எழுதிய கடிதத்தில் ஒன்றும் முக்கியமான விஷயம் இல்லை என்று கூறி, அடுத்த நாள் செய்தி தாள்களை பார்த்தால், விளையாட்டு துறை மந்திரிகளாய் இருந்த மொத்தம் மூன்று அமைச்சர்களின் கடிதங்கள் வெளிவந்து சந்தி சிரிக்கிறது...

பிளான் பண்ணி செய்யணும், பிளான் பண்ணாம செஞ்சா இப்படிதான்....

http://www.thehindu.com/news/national/article2155792.ece