politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

12.7.11

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்...


ஒரு பேருந்து நிலையத்தில் ஒருவன் புலம்பி கொண்டிருந்தான், தன் பாக்கெட்டில் வைத்ததிருந்த பணத்தை யாரோ களவாடி விட்டதாக அழுது புலம்பி கொண்டிருந்தான்...
சுற்றி இருந்த அனைவரும் பரிதாபத்துடன் பார்த்தபடி அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்...
ஊருக்கு திரும்பி கூட போக முடியவில்லை என்று அழுது கொண்டிருந்தவனை நமது கதையின் கதாநாயகன் நெருங்கினான்... பேச்சு கொடுத்தான்.. சாப்பிட்டியா என்று கேட்டான்... இல்லை என்று பதில் வந்தவுடன் அருகில் இருந்த உணவகத்தில் சாப்பாடு வாங்கி கொடுத்து பேருந்து ஏற்றி விட்டு, கை செலவுக்கு நூறு ரூபாயும் கொடுத்து விட்டான்... பணத்தை பறி கொடுத்தவன் நன்றியுடன் கண்ணில் நீர் வடிய அவனை கை கூப்பி தொழுதான்... வாழ் நாள் முழுவதும் நம் கதாநாயகனை மறக்க மாட்டேன் என்று கூறினான்...
அதெல்லாம் பரவாயில்லை என்று கூறி விட்டு பிரிந்து சென்ற கதாநாயகன், புதர் மறைவில் உட்கார்ந்து பர்சில் இருந்த மீதி பணத்தை எண்ணி விட்டு, காலி பர்சை தூக்கி எரிந்து விட்டு தன் வழியில் சென்றான்...

அது போல், தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்ற வழி தெரியாமல், நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களின் மேல் வரிகளை உயர்த்தி 4200 கோடி ரூபாய் எக்ஸ்ட்ரா வருமானத்திற்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார்...

ஏற்கனவே மத்திய அரசு பல்வேறு வகையில் விலை வாசியை உயர்த்தி நம் முதுகை உடைத்து கொண்டிருக்கும் பொழுது, மாநில அரசும் உடைக்க ஆரம்பித்தால்...

எனக்கென்னவோ புரட்சி சீக்கிரம் வந்து விடுமோ என்று தான் தோன்றுகிறது...

http://thatstamil.oneindia.in/news/2011/07/12/tn-govt-hikes-value-added-taxes-aid0136.html