politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

21.7.11

சமமும் இல்லை... சமாதானமும் இல்லை...

 இருபது மணி நேரம் சாப்பிடும் குதிரை போல் இல்லாமல் சிறிது நேரம் மட்டுமே நன்றாக உண்டுவிட்டு அசைபோடும் கழுதை...

குதிரைகள் போல் எளிதில் பயந்து கண்மூடித்தனமாக ஓடாமல், சிறிது தூரம் ஓடிய பின் எது தன்னை பயமுறுத்தியது என்று ஆராயும் தன்மை கொண்டது கழுதை...

குதிரைகள் போல் அல்லாமல் கழுதைகள் சிந்திக்கும் குணம் கொண்டவை... ஆகையால் தான் அவற்றை அடக்கி ஆளவோ மிரட்டி வேலை வாங்கவோ முடியாது... எதையாவது கற்றுக்கொடுத்தால் அவற்றால் தனக்கு ஆபத்து இல்லை என்று தெரிந்துக் கொண்ட பின்பே அவற்றை கற்றுக் கொள்ளும் திறன் கொண்டவை கழுதைகள்...

கழுதைகளுக்கு நாம் ஏதாவது கற்றுக் கொடுக்க வேண்டும் என்றால் நாம் அதன் நம்பிக்கையை பெற வேண்டும் என்பதும் முக்கியம்..

வேகமாக பயணிப்பது முக்கியம் அல்ல, சரியான பாதையில் பயணிக்கிறோமா என்பது தான் முக்கியம்..
சரியான பாதையில் பயணம் செய்ய மேற்கூறிய கழுதை குணம் கொண்ட இயந்திரமே போதுமானது...

எதையாவது பேச வேண்டும் என்று பேசும்  எதிர்க்கட்சி தலைவர் ..
ஏதாவது தீர்ப்பு சொல்லலாம் என்று வழ வழ கொழ கொழ என்று தீர்பளிக்கும் நீதிமன்றம்..
ஏதாவது நடக்க கூடாது, நான் நினைத்ததே நடக்க வேண்டும் என்ற மன நிலையில் முதல்வர்...
ஏதாவது நடக்காதா என்ற ஏக்கத்தில் தமிழக மக்கள்...

வோட்டு போட்ட பிறகு யோசிக்க கூடாது என்று தான் அறிவு முதிர்ச்சி அடைந்தவர்கள் ஓட்டு போட வேண்டும் என்று வரை அறுத்து வைத்துள்ளார்கள் சட்ட மேதைகள்...

ஆளும் கட்சிக்கு வோட்டு போடாதவர்களையும் சோதித்து பார்க்கும் ஜனநாயகம்...

பெற்றோர்களின் கரங்களில் தங்கள் எதிர் காலத்தை கொடுத்து விட்டு கவலையில் மாணவர்கள்...

தமிழகமே என்ன செய்யப் போகிறோம்...

குதிரை கேட்டோம் கிடைக்கவில்லை, கழுதை கிடைக்கிறது... குதிரை கிடைக்கும் வரை கழுதையை பயன்படுத்திக் கொள்ளலாமே - கேப்டன்

கழுதையை விட குதிரை மேம்பட்டதா  என்பதை அறிய...
http://www.longhopes.org/donkeysvshorses.html